கூப்பிடலாமா ? ! ?
இருக்கிறான் ! ! !
அந்தர்யாமி இருக்கிறான் !
உன்னுள்ளே உன்னோடு எப்போதும்
அந்தர்யாமி இருக்கிறான் !
யாரிடம் புலம்பி என்ன பிரயோஜனம் !
யாரிடம் அழுது என்ன பிரயோஜனம் !
யாரிடம் கேட்டு என்ன பிரயோஜனம் !
யாரிடம் சொல்லி என்ன பிரயோஜனம் !
யாரிடம் கெஞ்சி என்ன பிரயோஜனம் !
யாரிடம் முறையிட்டு என்ன பிரயோஜனம் !
நீ புலம்புவதை எல்லாம் எப்பொழுதும்
கேட்க உன் அந்தர்யாமி உண்டு !
உன் மனதிற்கு சமாதானம் சொல்ல
உன் அந்தர்யாமி உண்டு !
உன் கோரிக்கைகளை எல்லாம்
நிறைவேற்ற உன் அந்தர்யாமி உண்டு !
உனக்கு நம்பிக்கையும் பலமும்
தர உன் அந்தர்யாமி உண்டு !
உன் கண்ணீரை துடைக்க உன்னோடு
உன் அந்தர்யாமி உண்டு !
உன் முகத்தில் சிரிப்பை வரவழைக்க
உன் அந்தர்யாமி உண்டு !
உனக்கு வழி காட்ட என்றும்
உன் அந்தர்யாமி உண்டு !
உனக்கு தோள் கொடுக்க
உன் அந்தர்யாமி உண்டு !
அதனால் உலகில் வாழ்வாய் !
அதனால் உலகில் சிரிப்பாய் !
அதனால் உலகில் ஜெயிப்பாய் !
இன்று முதல் உன் அந்தர்யாமியை
திடமாய் நம்பு !
த்ரௌபதி தன்னுள் இருந்த
அந்தர்யாமியைத் தான்
"ஹ்ருதயகமலவாசா" என்று
ஆபத்துக் காலத்தில் அழைத்தாள் !
உடனே கண்ணனும் வந்தான் !
புடவையைத் தந்து கொண்டே இருந்தான் !
உனக்கும் எனக்கும் அவன் உண்டு !
நாமும் கூப்பிட்டால் உடனே வருவான் !
கூப்பிடலாமா ? ! ?
அந்தர்யாமி என்னும் நீங்காத செல்வம்
உன்னோடிருக்க நீ ஏன் அல்பர்களிடம் கெஞ்சுகிறாய் ! ! !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக