ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 மார்ச், 2017

மழையே மழையே வா வா !!!

மழையே மழையே வா வா...
ஆசை முத்தம் தா தா...

மழையே மழையே வா வா...
பஞ்சம் தீர்க்க வா வா...

மழையே மழையே வா வா...
பசுமை தழைக்க வா வா...

மழையே மழையே வா வா...
உலகம் உய்ய வா வா...

மழையே மழையே வா வா...
தாகம் தீர்க்க வா வா...

மழையே மழையே வா வா...
தர்மம் தழைக்க வா வா...

மழையே மழையே வா வா...
மண்ணுலகம் செழிக்க வா வா...

மழையே மழையே வா வா...
பயிர்கள் வாழ வரம் தா தா...

மழையே மழையே வா வா...
விதைகள் முளைக்க வா வா...

மழையே மழையே வா வா...
வறுமை அழிய வா வா...

மழையே மழையே வா வா...
விவசாயி சிலிர்க்க வா வா...

மழையே மழையே வா வா...
வீறுகொண்டு வா வா...

மழையே மழையே வா வா...
தெய்வமாய் அருள வா வா...

மழையே மழையே வா வா...
நம்பிக்கை ஜெயிக்க வா வா...

மழையே மழையே வா வா...
மாதம் மும்முறை வா வா...

மழையே மழையே வா வா...
வெப்பம் தணிய வா வா...

மழையே மழையே வா வா...
பூமி புத்துணர்ச்சி பெற வா வா...

மழையே மழையே வா வா...
மண்ணைப் புணர வா வா...

மழையே மழையே வா வா...
மனம் திளைக்க வா வா...

மழையே மழையே வா வா...
உடல் குதூகலிக்க வா வா...

மழையே மழையே வா வா...
மக்கள் மதிக்க வா வா...

மழையே மழையே வா வா...
உடனே உடனே வா வா...

மழையே மழையே வா வா...
எல்லோருக்கும் பொதுவாய் வா வா...

மழையே மழையே வா வா...
பொறுப்பாய் விரைந்து வா வா...

மழையே மழையே வா வா...
இடி மின்னலோடு வா வா...

மழையே மழையே வா வா...
ஆறு குளம் ஏரி நிரம்ப வா வா...

மழையே மழையே வா வா...
கிணறு, குட்டை, நிறைய வா வா...

மழையே...
அடிபணிகிறோம் உன்னை...
அருள் செய் எம்மீது...

Read more...

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

வா ! வா ! போ ! போ !

ராதேக்ருஷ்ணா

ஆரோக்கியமே வா வா !
வியாதியே போ போ ! !

நிம்மதியே வா வா !
வலியே போ போ ! !

பலமே வா வா !
பலகீனமே போ போ ! !

சக்தியே வா வா !
தளர்ச்சியே போ போ ! !

நம்பிக்கையே வா வா !
அவநம்பிக்கையே போ போ ! !

தைரியமே வா வா !
 பயமே போ போ ! !

 உறுதியே வா வா !
 சோர்வே போ போ ! !

அறிவே வா வா !
அறியாமையே போ போ ! !

வீரமே வா வா !
கோழைத்தனமே போ போ ! !

சுறுசுறுப்பே வா வா !
சோம்பேறித்தனமே போ போ ! !


அன்பே வா வா !
விரோதமே போ போ ! !


பொறுமையே வா வா !
அவசரமே போ போ ! !


 தீர்வே வா வா !
பிரச்சனையே போ போ ! !


ஒளியே வா வா !
இருளே போ போ ! !


சமாதானமே வா வா !
சண்டையே போ போ ! !


உண்மையே வா வா !
பொய்யே போ போ ! !


பசுமையே வா வா !
வறட்சியே போ போ ! !

இன்பமே வா வா !
துன்பமே போ போ ! !


தெளிவே வா வா !
குழப்பமே போ போ ! !


ப்ரேமையே வா வா !
காமமே போ போ ! !


பக்தியே வா வா !
தற்பெருமையே போ போ ! !

க்ருஷ்ணா வா வா !
அஹம்பாவமே போ போ ! !

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP