ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Tuesday, October 30, 2012

ராச பௌர்ணமி !

ராதேக்ருஷ்ணாசரத் பூர்ணிமா . . .

சரத் கால பௌர்ணமி !


கண்ணனுக்குப் பிடித்த
விசேஷமான பௌர்ணமி !


கோபிகைகளின் எண்ணங்கள்
பலித்த பௌர்ணமி !


தேவர்களும் கண்டு
அதிசயித்த பௌர்ணமி !


பக்தர்கள் அனைவரும்
ஏங்கும் பௌர்ணமி !


மஹாத்மாக்கள் எல்லோரும்
கொண்டாடும் பௌர்ணமி !


பரமாத்மா ஜீவாத்மாவிற்கு
தன்னையே தரும் பௌர்ணமி !


 ஜீவாத்மா பரமாத்வாவில்
கரைந்து போகும் பௌர்ணமி !


பக்தியின் எல்லையான
ப்ரேமைக்கு ஒரு பௌர்ணமி !


ராதிகா ராணியின் தாபம்
தீர்த்த பௌர்ணமி !


அஷ்ட சகிகளின் ஆனந்தம்
எல்லை கடந்த பௌர்ணமி !


ப்ருந்தாவனமே வசப்பட்டு
மயங்கிக் கிடக்கும் பௌர்ணமி !


சிவபெருமானும் தவமிருந்து
ஆசைப்படும் பௌர்ணமி !


ராசக்ரீடையில் கண்ணனை
அனுபவிக்க ஒரே பௌர்ணமி !


சந்திரனும் க்ருஷ்ண சந்திரனின்
காதலியாய் மாறும் பௌர்ணமி !


ஜயதேவர் அஷ்டபதியின்
ரஹஸ்ய அர்த்த பௌர்ணமி !


ஆண்டாளின் நாச்சியார் திருமொழி
காதல் அர்த்த பௌர்ணமி !


அத்தனை கோபிகைகளுக்கும்
தன்னைத் தனித் தனியாக
கண்ணன் தன்னைத் தந்த பௌர்ணமி !


கோபிகைகளின் இஷ்டப்படி எல்லாம்
கண்ணன் சேவை செய்த பௌர்ணமி !


ராதிகா ராணியை மட்டும்
ஏகாந்தமாய் கண்ணன்
அழைத்துச் சென்ற பௌர்ணமி !


கோபிகைகள் அஹம்பாவம்
அழிந்து கதறியழுது கண்ணனுக்காக
கோபிகா கீதம் பாடின பௌர்ணமி !


கண்ணனும் சாக்ஷாத்
மன்மத மன்மதனாக
அலங்கரிந்து வந்த பௌர்ணமி !


அர்த்த ராத்திரியில் கண்ணன்
கோபிகா ஸ்த்ரீகளோடு
ப்ருந்தாவனத்தை வலம் வந்த
சுற்றுலா பௌர்ணமி !


அழகான யமுனையில்,
கண்ணனும் கோபிகைகளும்
ஜலக்ரீடை செய்த
ஸ்ருங்கார பௌர்ணமி !


ஐப்பசியின் பௌர்ணமி...
ஆயாசம் தீர்க்கும் பௌர்ணமி !


சரத் காலமே நீ வாழ்க !
பௌர்ணமியே நீ வாழ்க !


ப்ருந்தாவனமே நீ வாழ்க !
சேவா குஞ்சமே நீ வாழ்க !


ராச லீலையே நீ வாழ்க !
ப்ரேமையே நீ வாழ்க !


ராதிகா ராணிக்கு ஜெய் !
க்ருஷ்ண ப்ரபுவுக்கு ஜெய் !


கோபிகா ஸ்த்ரீகளுக்கு ஜெய் !


ஒரு நாள் நாமும்
நம் கண்ணனோடு
சத்தியம் ராசம் ஆடுவோம் !


அதுவரை . . .

விடாமல் ஜபிப்போம் . . .

"ராதே க்ருஷ்ணா "


அதுவரை . . .
உரக்க ஜபிப்போம் . . .
"ராதேக்ருஷ்ணா"


அதுவரை . . .
உற்சாகமாய் ஜபிப்போம் . . .
"ராதேக்ருஷ்ணா"


அதுவரை . . .
உண்மையாய் பக்தி செய்வோம் . . .

அதுவரை . . .
குரு சொல்படி நடப்போம் . . .

அதுவரை . . .
இந்த பூமியில் இருப்போம் . . .


அதுவரை . . .
ஆனந்தவேதம் தொடரும் . . .


0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP