போற்றி ! போற்றி !
ராதேக்ருஷ்ணா
பத்மநாபனே போற்றி ! போற்றி !
அனந்தபுரி நாதனே போற்றி ! போற்றி !
சாளக்ராம தேவனே போற்றி ! போற்றி !
த்வாரகா நாயகனே போற்றி ! போற்றி !
திவாகர முனி புத்ரனே போற்றி ! போற்றி !
அனந்தன்காட்டு அற்புதமே போற்றி ! போற்றி !
பதினெட்டு அடி தெய்வமே போற்றி ! போற்றி !
பில்வமங்கள ப்ரியனே போற்றி ! போற்றி !
கண்ணி மாங்காய் ரசிகனே போற்றி ! போற்றி !
ஸ்வாமி நம்மாழ்வாரின்
நம்பிக்கை நாயகனே போற்றி ! போற்றி !
இராமானுஜரின் குறுங்குடி வாஹனமே
போற்றி ! போற்றி !
க்ருஷ்ணசைதன்யரை ப்ரேமையால் கட்டினவனே
போற்றி ! போற்றி !
ஸ்வாதி திருநாளைத்
தன்னோடு வைத்துக்கொண்டவனே
போற்றி ! போற்றி !
நரசிங்கமாய் பவனி வருபவனே
போற்றி ! போற்றி !
க்ருஷ்ணனாய் லீலைகள் செய்பவனே
போற்றி ! போற்றி !
வனவாசி ராமனாய் அருள்பவனே
போற்றி ! போற்றி !
லக்ஷதீப மஹோத்சவ ப்ரபுவே
போற்றி ! போற்றி !
ஸ்ரீ பூமிதேவி, ஸ்ரீ நீளா தேவி சமேதனே
போற்றி ! போற்றி !
திருவிதாங்கூர் வம்ச பொக்கிஷமே
போற்றி ! போற்றி !
வேட்டையாடும் வில்லாளியே
போற்றி ! போற்றி !
சங்குமுக கடற்கரையில் ஆராடும்
அழகனே போற்றி ! போற்றி !
கஜராணி ப்ரியதர்ஷினியின்
பின் செல்பவனே போற்றி ! போற்றி !
சகலகலா ரசிகனே போற்றி ! போற்றி !
மூன்று வாசல் வனப்பான இளைஞனே
போற்றி ! போற்றி !
ஆதிசேஷ அனந்த சயனனே
போற்றி ! போற்றி !
அரளிப்பூ மாணிக்க மாலை
அலங்காரனே போற்றி ! போற்றி !
நாபியிலும்,கையிலும் தாமரை
உடையவனே போற்றி ! போற்றி !
முப்பத்து மூவருக்கு அருளும்
தேவாதி தேவனே போற்றி ! போற்றி !
மயில்பீலியை விட மென்மையானவனே
போற்றி ! போற்றி !
ஒற்றைக்கல் பக்த சாம்ராஜ்ய ராஜனே
போற்றி ! போற்றி !
ஒன்றரை லக்ஷம் கோடி சம்பத்குமாரனே
போற்றி ! போற்றி !
திருப்பாற்கடல் நாதனே போற்றி ! போற்றி !
சதுர்வேத பாராயணம் கேட்பவனே
போற்றி ! போற்றி !
ஸ்ரீமத் பாகவத அவதாரமே
போற்றி ! போற்றி !
சஹஸ்ர நாம ஆதி மூலமே
போற்றி ! போற்றி !
கோபாலவல்லியின் உள்ளம்
கவர் கள்வனே போற்றி ! போற்றி !வர்வர்வர் வர் கள்வனே
கோபாலவல்லியின் கூட்டத்தை
ரக்ஷிப்பவனே போற்றி ! போற்றி !
ரக்ஷிப்பவனே பலமே பலனே
0 கருத்துகள்:
கருத்துரையிடுக