ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 அக்டோபர், 2012

பெண்ணே ! பெண்ணே !


ராதேக்ருஷ்ணா...

பெண்ணே ! பெண்ணே !
நீ பகவானின் அதிசயமான சிருஷ்டி !


பெண்ணே ! பெண்ணே !
நீ உலகின் என்றும் மாறாத அச்சாணி !


பெண்ணே ! பெண்ணே !
நீ வம்சத்தை வாழ வைக்கும் ரஹஸ்யம் !


பெண்ணே ! பெண்ணே !
நீ இயற்கையின் அரிய  பொக்கிஷம் !

 
பெண்ணே ! பெண்ணே !
நீ அண்ட சராசரத்தின் விசேஷ சக்தி !

 
பெண்ணே ! பெண்ணே !
நீ தியாகத்தின் பூரணமான அர்த்தம் !

 
பெண்ணே ! பெண்ணே !
நீ உயிர்கள் அனைத்திற்கும் ஆனந்தம் !


பெண்ணே ! பெண்ணே !
நீ தெய்வத்தையும் தாங்கும் பலசாலி !

 
பெண்ணே ! பெண்ணே !
நீ ஆண்களை உற்பத்தி செய்யும் வித்து !


பெண்ணே ! பெண்ணே !
நீ எதிர்கால சந்ததியின் அஸ்திவாரம் !

 
பெண்ணே ! பெண்ணே !
நீ மகான்களையும் தரும் உந்து சக்தி !

 
பெண்ணே ! பெண்ணே !
உனக்கு தான் தெய்வமும் வசப்படும் !

 
பெண்ணே ! பெண்ணே !
நீ போகப் பொருளல்ல ! ! !

 
பெண்ணே ! பெண்ணே !
நீ பலவீன சாதியில்லை ! ! !


பெண்ணே ! பெண்ணே !
 நீ அழக்கூடாது !


பெண்ணே ! பெண்ணே !
நீ புலம்பக்கூடாது !


பெண்ணே ! பெண்ணே !
நீ உயர்ந்தவள் . . .


பெண்ணே ! பெண்ணே !
பெண்ணாய் பிறப்பது அரிதிலும் அரிது !

 
பெண்ணே ! பெண்ணே !
நீ என்றும் விசேஷமானவள் !

 
பெண்ணே ! பெண்ணே !
நீ என்றும் அற்புதமானவள் !


பெண்ணே ! பெண்ணே !
நீ என்றுமே உயர்ந்தவள் !
 

பெண்ணே ! பெண்ணே !
உனக்குத் தான் நவராத்திரி !

 
பெண்ணே ! பெண்ணே !
உனக்குத் தான் தங்கமும், வைரமும் !

 
பெண்ணே ! பெண்ணே !
உனக்குத் தான் பட்டும், பூவும் !

 
பெண்ணே ! பெண்ணே !
உனக்குத்தான் அழகும், அன்பும் !

 
பெண்ணே ! பெண்ணே !

கண்ணன் கீதையில் சொன்னான் !
உன்னுடைய அத்தனை உயர்ந்த
விஷயங்களும் அவன்தான் என்று ! ! !


அதனால் பெண்ணே ! பெண்ணே !
நீ தெய்வத்தின் ஒரு துளி !

பெண்ணே ! பெண்ணே !
நீ தெய்வப் பிறவி ! ! !

பெண்ணே ! பெண்ணே !
உனக்கு வந்தனம் ! ! !

ஆவதும் பெண்ணாலே...
அழிவதும் பெண்ணாலே...

ஆம்...சத்தியம்....
எல்லாம் நல்லவை ஆவதும் பெண்ணாலே...
எல்லா தீமைகளும் அழிவதும் பெண்ணாலே...

பெண்ணே ! பெண்ணே !
அதனால் சிவனும் தந்தான்
தன் மேனியில் சரிபாதி !

பிரமனும் தந்தான் தன்
நாவையே இருப்பிடமாக !

திருமாலும் தந்தான் தன்
திருமார்பில் நிவாசம் !


பெண்ணே ! பெண்ணே !
ஆஞ்சநேயனைப் பெற்ற அஞ்சனையும் உன்னைப் போல் பெண்தானே...


பெண்ணே ! பெண்ணே !
சங்கரனைப் பெற்ற ஆர்யாம்பாளும் உன்னைப் போல் பெண்தானே...


பெண்ணே ! பெண்ணே !
ராமானுஜரைப் பெற்ற
காந்திமதியும் உன்னைப் போல் பெண்தானே...


பெண்ணே ! பெண்ணே !
மத்வரைப் பெற்ற வேதவதியும் உன்னைப் போல் பெண்தானே...


பெண்ணே ! பெண்ணே !
க்ருஷ்ண சைதன்யரைப் பெற்ற சசிதேவியும் உன்னைப் போல் பெண்தானே...


பெண்ணே ! பெண்ணே !
உன் பெருமை சொல்ல
என்னால் ஆகாது !

பெண்ணே ! பெண்ணே !
நானும் ஒரு ஜன்மா
பெண்ணாய் பிறக்க
நீ ஆசீர்வாதம் செய்...


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP