ஆஹா . . . ஆஹா . .
ராதேக்ருஷ்ணா
பத்மநாபா . . .
சுகமாக வேட்டையாடினாயா ?
உன் பக்தர் எல்லோரையும் பார்த்தாயா ?
துஷ்ட சம்ஹாரம் செய்து விட்டாயா ?
நான் மட்டும் அங்கில்லையே . . .
என் துக்கம் உனக்குத் தெரிந்துவிட்டதே !
நான் உன்னை நினைப்பது தானே சரி !
ஆனால் நீ என்னை நினைத்துக்கொண்டாயே !
இதற்கு நான் என்ன கைமாறு செய்வேன் ?
நான் உன்னுடைய நாமத்தை
விடாமல் ஜபிப்பவனில்லையே ?
நான் உன்னுடைய திரு மிகுந்த
அனந்தபுரிவாசி இல்லையே ?
உனது திருவடியில் பூரணமாக
சரணாகதி செய்தவனில்லையே ?
உனக்காக எதையும் துளி கூட
தியாகம் செய்தவனில்லையே ?
பெரிய வைராக்கியசாலி இல்லையே ?
நல்ல ஞானி இல்லையே ?
உத்தமமான பக்தன் இல்லையே ! ? !
ஆயினும் நீ என்னை நினைத்துக்
கொண்டாயே !
என்ன செய்வேன் என் பத்மநாபா !
இந்த குழந்தையின் அழுகையை
மாற்றிவிட்டாயே !
நான் உன் குழந்தை என்பதை
நிரூபித்துவிட்டாயே ! ! !
நான் பத்மநாபனின் குழந்தை !
ஆஹா . . . ஆஹா . . . . .
கொண்டாயே !
என்ன செய்வேன் என் பத்மநாபா !
இந்த குழந்தையின் அழுகையை
மாற்றிவிட்டாயே !
நான் உன் குழந்தை என்பதை
நிரூபித்துவிட்டாயே ! ! !
நான் பத்மநாபனின் குழந்தை !
ஆஹா . . . ஆஹா . . . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக