ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Thursday, October 4, 2012

பிடிக்கவே பிடிக்காது !

ராதேக்ருஷ்ணா


வம்பு பேசாதே !

உனக்கு வேறு ஆயிரம்
வேலைகள் இருக்கிறது !

அதை ஒழுங்காகப் பார் !


யாரைப் பற்றியும் வம்பு
பேச உனக்கு அதிகாரமில்லை !


யாருடைய வியாதியைப்
பற்றியும் வம்பு பேசாதே !


யாருடைய தோல்விகளைப்
பற்றியும் வம்பு பேசாதே !


யாருடைய பிரச்சனைகளைப்
பற்றியும் வம்பு பேசாதே !


யாருடைய குறைகளைப்
பற்றியும் வம்பு பேசாதே !


யாருடைய குடும்பத்தைப்
பற்றியும் வம்பு பேசாதே !


யாருடைய கஷ்டத்தைப்
பற்றியும் வம்பு பேசாதே !


யாருடைய பலவீனத்தைப்
பற்றியும் வம்பு பேசாதே !


யாருடைய தவறுகளைப்
பற்றியும் வம்பு பேசாதே !


யாருடைய குழப்பத்தைப்
பற்றியும் வம்பு பேசாதே !


யாருடைய காமத்தைப்
பற்றியும் வம்பு பேசாதே !


யாருடைய கோபத்தைப்
பற்றியும் வம்பு பேசாதே !


யாருடைய பாவத்தைப்
பற்றியும் வம்பு பேசாதே !


யாருடைய உறவுகளைப்
பற்றியும் வம்பு பேசாதே !


யாருடைய வாழ்க்கையைப்
பற்றியும் வம்பு பேசாதே !


யாருடைய செயலைப்
பற்றியும் வம்பு பேசாதே !


யாருடைய கடந்தகாலத்தைப்
பற்றியும் வம்பு பேசாதே !


யாருடைய நஷ்டத்தைப்
பற்றியும் வம்பு பேசாதே !


யாருடைய ரஹஸ்யங்களைப்
பற்றியும் வம்பு பேசாதே !


யாருடைய பக்தியைப்
பற்றியும் வம்பு பேசாதே !


எந்த ஒரு சத்குருவைப்
பற்றியும் வம்பு பேசாதே !


எந்த சத்சங்கத்தைப்
பற்றியும் ஒரு போதும் வம்பு பேசாதே !

போதுமா . . .
இன்னம் சொல்லணுமா ?

வம்பு . . . உன் மீது
மரியாதை வைத்தவருக்கு
நீ செய்யும் நம்பிக்கை துரோகம் !

வம்பு . . . உன் க்ருஷ்ணன்
உன் மீது வைத்திருக்கும்
அன்பிற்கு நீ செய்யும் துரோகம் !

வம்பு . . . உன் மீது
நம்பிக்கை வைத்திருக்கும் குருவுக்கு
நீ செய்யும் துரோகம் !


வம்பு என்பது மிகப்பெரிய பாவம் !


வம்பு என்பது பலவீனம் !


வம்பு என்பது க்ருஷ்ணனுக்கு
பிடிக்காது !


வம்பு என்பது குருவுக்கு
பிடிக்கவே பிடிக்காது !


வம்பு என்பது மஹாத்மாக்கள்
எவருக்குமே பிடிக்காது !


ஞானிகள் வம்பு பேசுவதில்லை !
யோகிகள் வம்பு பேசுவதில்லை !
ரிஷிகள் வம்பு பேசுவதில்லை !
பக்தர்கள் வம்பு பேசுவதில்லை !


நீ பக்தியில் உயரவேண்டுமென்றால்
முதலில் வம்பை விடு !


நீ க்ருஷ்ணனை அனுபவிக்க
வேண்டுமென்றால் முதலில் வம்பை விடு !


குழந்தைகள் வம்பு பேசுவதில்லை !
குழந்தைகள் வம்பு கேட்பதில்லை !
குழந்தைகள் வம்பை நினைப்பதில்லை !


வம்பு உன்னை பலவீனமாக்குகிறது !
வம்பு உன்னை குழப்புகிறது !
வம்பு உன் நேரத்தை வீணடிக்கிறது !


வம்பு பேசாதே !
வம்பு கேட்க்காதே !
வம்பைப் பற்றி யோசிக்காதே !


இனி நல்லதைப் பற்றி வம்பு பேசு !
இனி பாகவதத்தைப் பற்றி வம்பு பேசு !
இனி ராமாயணத்தைப் பற்றி வம்பு பேசு !
இனி பகவானைப் பற்றி வம்பு பேசு !


ஒரு முக்கியமான விஷயம் . . .
உங்களோடு நான் பகிர்ந்து
கொண்டே ஆகவேண்டும் !


இன்றோடு ஆனந்தவேதத்திற்கு
3 வயது ஆகிறது . . .


காலம் காற்றை விட வேகமானது !


இத்தோடு 451 ஆனந்தவேதங்களை
உனக்காகவும், எனக்காகவும்
நம் கண்ணன் தந்து விட்டான் !
 ஆழ்வார்கள், ஆசார்யர்கள்,
பக்தர்களின் பூரணமான ஆசியினால்
3 வயது ஆனந்தவேதத்திற்கு !


வா. . . நம் சந்தோஷத்தைக்
கொண்டாடுவோம் . . .0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP