ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 10 மே, 2011

நான் கற்ற பாடம் !

ராதேக்ருஷ்ணா

போராடு . . .

உன்னால் முடியும்; போராடு !

உன்னிடம் பலமுண்டு; போராடு !

உனக்குள் சக்தியிருக்கிறது; போராடு !

உன்னுடன் க்ருஷ்ணன் இருக்கிறான்;
அதனால் போராடு !

வெற்றியைப் பற்றி யோசிக்காமல் போராடு !

தோல்வியைப் பற்றிப் பயப்படாமல் போராடு !

அவமானத்தை நினைக்காமல் போராடு !

எதற்கும் கலங்காமல் போராடு !

தைரியத்தை விடாமல் போராடு !

போராடாவிட்டால் வாழ்க்கையே போராட்டம் !

போராடிவிட்டால் வாழ்க்கை உன்னை மதிக்கும் !

போராடாமல் இந்த உலகில் வாழ்க்கையில்லை !

ஜனனம் ஒரு போராட்டம் !

பசி ஒரு போராட்டம் !

ஆரோக்கியம் ஒரு போராட்டம் !

அன்பு ஒரு போராட்டம் !

அதனால் போராடு !

முயற்சியோடு போராடு !

இங்கு போராட்டமில்லாவிடில்
வாழ்க்கை ஒரு நரகம் !

இங்கு போராடத் தயங்குபவருக்கு
வாழ்க்கை ஒரு பயங்கரம் !

இங்குப் போராடாதவர்கள்
சாதனை செய்யமுடியாது !

இங்கு போராட்டத்திலிருந்து
ஒதுங்குபவர்கள்,
வாழ்க்கையை ஒதுக்குகிறார்கள் !

இங்கு போராட பயப்படுபவர்களை
வாழ்க்கை ஒதுக்கிவைக்கிறது !

மரமும் செடியும் போராடுகிறது !

பறவையும்,மிருகமும் போராடுகிறது !

ஈயும், எறும்பும் போராடுகிறது !

ஹே மனிதா !
நீயும் போராடு !

முடிந்தவரை போராடு என்று
நான் சொல்லமாட்டேன் !

வாழ்க்கை முடியும் வரை
போராடு என்பதே நான் கற்ற பாடம் !

இதுவே என் வாழ்வின் பலம் !
இதுவே என் ஆனந்தவேதம் !
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP