அணையா ஜோதி !
ராதேக்ருஷ்ணா
சிரி . . .
துன்பத்தைப் பார்த்துச் சிரி !
சிரி . . .
குழப்பத்தைப் பார்த்துச் சிரி !
சிரி . . .
பயத்தைப் பார்த்துச் சிரி !
சிரி . . .
கவலைகளைக் கண்டு சிரி !
சிரி . . .
அவமரியாதைக் கண்டு சிரி !
சிரி . . .
நோயைப் பார்த்துச் சிரி !
சிரி . . .
பொறாமையைப் பார்த்துச் சிரி !
சிரி . . .
அஹம்பாவத்தைப் பார்த்துச் சிரி !
சிரி . . .
தற்பெருமையைப் பார்த்துச் சிரி !
சிரி . . .
பிரச்சனைகளைக் கண்டு சிரி !
சிரி . . .
சுமைகளைக் கண்டு சிரி !
சிரி . . .
கஷ்டமான சமயங்களில் சிரி !
சிரி . . .
நீ நம்பினவர்கள் உன்னை
ஏமாற்றும்போது சிரி !
சிரி . . .
உனக்கு நம்பிக்கை துரோகம்
செய்தவர்களைக் கண்டு சிரி !
சிரி . . .
உன்னை எல்லோரும்
ஒதுக்கிவைக்கும்போது சிரி !
சிரி . . .
உலகம் உன்னைக் கண்டு
பரிகசிக்கும்போது சிரி !
சிரி . . .
உலகம் உன் மீது வீண் பழி
சுமத்தும்போது சிரி !
சிரி . . .
நீ நஷ்டப்படும்போது சிரி !
சிரி . . .
நீ தோல்வியடையும்போது சிரி !
சிரி . . .
சிரி . . . சிரி . . . சிரி . . .
அழுதது போதும் . . .
புலம்பியது போதும் . . .
நடுங்கியது போதும் . . .
நொந்தது போதும் . . .
வீழ்ந்தது போதும் . . .
கலங்கியது போதும் . . .
துவண்டது போதும் . . .
கெஞ்சியது போதும் . . .
எழுந்திரு , , ,
அணையா ஜோதி ஒன்று
உன்னோடு இருக்கிறது !
என்றும் உன்னோடு இருக்கிறது !
நம்பிக்கை என்னும் அணையா
ஜோதி உன்னிடம் இருக்கிறது !
அதனால் தைரியமாகச் சிரி . . .
கைகொட்டிச் சிரி . . .
விடாமல் சிரி . . .
சிரித்துக்கொண்டே இந்த உலகை வெல் !
சிரித்தே இந்த மனிதர்களை வெல் !
சிரிப்பால் உன்னையே வெல் !
சிரிப்பால் வெல்லமுடியாதது எதுவுமில்லை !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக