பக்தியை அனுபவி . . .
ராதேக்ருஷ்ணா
உனக்காகப் பக்தி செய் !
உன் க்ருஷ்ணனுக்காகப் பக்தி செய் !
உன் வாழ்க்கைக்காக பக்தி செய் !
உன் சந்தோஷத்திற்காக பக்தி செய் !
உன் நிம்மதிக்காகப் பக்தி செய் !
உன்னைப் புரிந்துகொள்ள பக்தி செய் !
உலகில் நிம்மதியாய் வாழ பக்தி செய் !
உன்னை க்ருஷ்ணன் அனுபவிக்க பக்தி செய் !
நீ க்ருஷ்ணனை அனுபவிக்க பக்தி செய் !
ஆனந்தமாக பக்தி செய் !
தைரியமாக பக்தி செய் !
நிதானமாக பக்தி செய் !
தீர்மானமாக பக்தி செய் !
த்ருப்தியாக பக்தி செய் !
சரியான பக்தி செய் !
முன்னோர் சொன்ன பக்தி செய் !
வாழ்க்கை முடியும் வரை பக்தி செய் !
வாழ்க்கை முடிந்த பின்னும் பக்தி செய் !
சுலபமான பக்தி செய் !
சுத்தமான பக்தி செய் !
யாருக்கும் உன் பக்தியை
நீ நிரூபணம் செய்ய வேண்டாம் !
உன் பக்தி . . .உன் க்ருஷ்ணன் . . .
அனுபவி . . .
பக்தியை அனுபவி . . .
யாருக்காகவோ பக்தி செய்யாதே . . .
பக்தி என்பது கடினம் இல்லை . . .
பக்தி என்பது கொடுமை இல்லை . . .
பக்தி என்பது குழப்பம் இல்லை . . .
எப்பொழுதும் சந்தோஷமாயிருக்கவே
பக்தி . . .
பக்தியை அறி . . .
பக்தியை அனுபவி . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக