பொறுமை இருக்கிறதா ? ? ?
ராதேக்ருஷ்ணா
அவசரப்படாதே . . .
வாழ்வில் பொறுமை
மிக மிக அவசியம் . . .
எங்கும் பொறுமையாயிரு !
எல்லோரிடமும் பொறுமையாயிரு !
எப்பொழுதும் பொறுமையாயிரு !
பொறுமை இல்லாதவர்கள்
வாழ்வில் ஜெயித்ததில்லை !
பொறுமை இல்லாதவர்கள்
பெரிய காரியங்கள் செய்யமுடியாது !
பொறுமை இல்லாதவர்கள்
தங்களையே அவமதிக்கிறார்கள் !
பொறுமை இல்லாதவர்கள்
தன்னையே இழக்கிறார்கள் !
பொறுமை இல்லாதவர்கள்
தெய்வத்தையும் அனுபவிப்பதில்லை !
பொறுமை இல்லாதவர்கள்
உலகில் வெல்வதில்லை !
பொறுமை இல்லாதவர்கள்
எதையும் சாதிப்பதில்லை !
பொறுமையாயிருப்பதால்
நீ கோழையில்லை !
பொறுமையாயிருப்பதால்
நீ முட்டாளில்லை !
பொறுமையாயிருந்தால்
உன்னால் சரியாக யோசிக்கமுடியும் !
பொறுமையாயிருந்தால்
உன்னால் தெளிவாகப் பேசமுடியும் !
பொறுமையாயிருந்தால்
உன்னால் சரியான முடிவெடுக்கமுடியும் !
பொறுமையாயிருந்தால்
உன்னால் சாதிக்கமுடியும் !
பொறுமையாயிருந்தால்
தெய்வம் உன்னைத் தேடி வரும் !
பொறுமையாயிருந்தால்
உலகம் உன்னை கொண்டாடும் !
பொறுமையாயிருந்தால்
உனக்கே உன்னைப் பிடிக்கும் !
பொறுமையாயிருந்தால்
நீ உலகையே ஆளலாம் !
பொறுமையாயிருந்தால்
உன் பேச்சு எடுபடும் !
பொறுமையாயிருந்தால்
உன்னை மற்றவர் மதிப்பர் !
பொறுமையாயிருந்தால்
உன் ஆரோக்கியம் நன்றாயிருக்கும் !
பொறுமையாயிருந்தால்
நீ நிம்மதியாக வாழமுடியும் !
பொறுமையாயிருந்தால்
நீ நீண்ட ஆயுளோடு இருக்கமுடியும் !
பொறுமையாயிருந்தால்
உன் காரியங்கள் தானாக நடக்கும் !
பொறுமையாயிருந்தால்
யாவரும் உனக்கு உதவிசெய்வர் !
பொறுமையாயிருந்தால்
உன் மனம் சமாதானமாயிருக்கும் !
பொறுமையாயிருந்தால்
அழகு உன்னைத் தேடி வரும் !
பொறுமையின் பெருமை பெரியது !
பொறுமை உனக்கிருந்தால்
உன்னை வெல்ல உலகில் யாருமில்லை !
பொறுமை இருக்கிறதா ? ? ?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக