செத்துப் போ . . .
ராதேக்ருஷ்ணா
என்ன விலை ?
உன் கண்களின் விலை என்ன ?
உன் காதுகளுக்கு என்ன விலை ?
உன் கைகளின் விலை என்ன ?
உன் கால்களுக்கு என்ன விலை ?
உன் சிந்தனையின் விலை என்ன ?
உன் மனதிற்கு என்ன விலை ?
உன் உடலின் விலை என்ன ?
உன் புத்திக்கு என்ன விலை ?
உன் உயிரின் விலை என்ன ?
உன் ஆனந்தத்திற்கு என்ன விலை ?
உன் வாழ்வின் விலை என்ன ?
உன் நேரத்திற்கு என்ன விலை ?
உன் ஆரோக்கியத்தின் விலை என்ன ?
யோசித்துப் பார் . . .
நீ விலைமதிப்பற்றவன்/ மதிப்பற்றவள் . . .
அதனால் நீ வாழ்ந்துகாட்டவேண்டும் . . .
ஒதுங்கியது போதும் . . .
பயந்தது போதும் . . .
குழம்பியது போதும் . . .
அழுதது போதும் . . .
சந்தேகம் கொண்டது போதும் . . .
புதியதாய் தொடங்கு . . .
உன்னை புதியதாய் மாற்றிக்கொண்டு
தொடங்கு . . .
உன் புது வாழ்வைத் தொடங்கு . . .
நேற்று தோற்ற நீ இன்று இல்லை . . .
இன்று வெல்ல நீ புதியதாக வந்திருக்கிறாய் !
பழையதை வீசி எறி . . .
உன் பழமையை கொளுத்திப்போடு . . .
புதிய விதையாய் உன்னை
வாழ்வில் விதை . . .
புதிய நம்பிக்கையை
தண்ணீராய் ஊற்று . . .
புதிய பலத்தை
சூரிய வெளிச்சமாய் காட்டு . . .
புதிய முயற்சியை
வேலியாய் கட்டு !
வென்று பார் . . .
உன்னை வென்று பார் . . .
உலகில் உன் விலையை
நீ நிர்ணயம் செய் . . .
உலகில் உன் மரியாதையை
நீ முடிவு செய் . . .
உலகில் உன் வாழ்க்கையின்
அர்த்தத்தை நீ நிரூபணம் செய் . . .
உடனே செய் . . .
உன் உடல் விழும் முன்பு செய் . . .
நீ வீழமாட்டாய் என்பதை
நிரூபித்துவிட்டுப் பிறகு
உன் உடலைக் கீழே போடு . . .
பிறகு உலகை விட்டுப் போ . . .
அதுவரை போராடு . . .
நிரூபித்துவிட்டு செத்துப் போ . . .
நிரூபணம் செய்யும் வரை வாழ் . . .
நிரூபணம் செய்வதற்காக வாழ் . . .
உன்னை உனக்கு நிரூபி . . .
நிரூபணம் செய்வதற்காக வாழ் . . .
உன்னை உனக்கு நிரூபி . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக