ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Saturday, September 10, 2011

இன்றே ஈடு செய் . . .

ராதேக்ருஷ்ணா

என் விதி என்னை
என் தகப்பனிடத்தில் முதலீடு செய்தது . . .

என் தகப்பன் என்னை
என் தாயின் கர்பத்தில் முதலீடு செய்தார் . . .

என் தாய் என்னை
பூமியில் முதலீடு செய்தார் . . .

பூமி என்னை
வாழ்வில் முதலீடு செய்தது . . .

வாழ்க்கை என்னை
அனுபவத்தில் முதலீடு செய்தது . . .

அனுபவங்கள் என்னை
பயத்தில் முதலீடு செய்தது . . .

பயம் என்னை
தேடலில் முதலீடு செய்தது . . .

தேடல் என்னை
குழப்பத்தில் முதலீடு செய்தது . . .

குழப்பம் என்னை
குருவிடத்தில் முதலீடு செய்தது . . .

குரு என்னை
நாமஜபத்தில் முதலீடு செய்தார் . . .

நாமஜபம் என்னை
பக்தியில் முதலீடு செய்தது . . .

பக்தி என்னை
 சரணாகதியில் முதலீடு செய்தது . . .

சரணாகதி என்னை
 க்ருஷ்ணன் திருவடியில் முதலீடு செய்தது . . .

க்ருஷ்ணன் திருவடி என்னை
 சத்சங்கத்தில் முதலீடு செய்தது . . .

சத்சங்கம் என்னை
ப்ரேமையில் முதலீடு செய்தது . . .

ப்ரேமை என்னை
ஆனந்தத்தில் முதலீடு செய்தது . . .

ஆனந்தம் என்னை
வைராக்கியத்தில் முதலீடு செய்தது . . .

வைராக்யம் என்னை
ஞானத்தில் முதலீடு செய்தது . . .

ஞானம் என்னை
யதார்த்தத்தில் முதலீடு செய்தது . . .

யதார்த்தம் என்னை
சாந்தியில் முதலீடு செய்தது . . .

இப்பொழுது சாந்தி என்னை
அனுபவித்துக்கொண்டிருக்கிறது . . .

எல்லோரும் சாந்தியை அனுபவிக்க
துடித்துக்கொண்டிருக்கின்றனர் . . .

நானும் அலைந்தவன் தான் . . .

ஆனால் இன்றோ சாந்தி
என்னை அனுபவித்துக்கொண்டிருக்கிறது . . .

முதலீடு நஷ்டமாகவில்லை . . .

 அருமையான லாபம் கிடைத்துள்ளது . . .

இன்னும் வேறென்ன வேண்டும் . . .

நீயும் உன்னை குருவிடத்தில்
முதலீடு செய் . . .

இன்று திருவோண நன்னாள் . . .

உலகளந்தானின் திருவடியைப்
பிடித்துக்கொண்டு உன்னை
முதலீடு செய் . . .

இனியும் பிறவியில் நஷ்டப்படாதே . . .

இந்தப் பிறவியை நஷ்டப்படுத்தாதே . . .

இதுவரை பட்ட நஷ்டங்களை
இன்றே ஈடு செய் . . .


  

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP