நினைப்பது நடக்கும் . . .
ராதேக்ருஷ்ணா
நினைப்பது நடக்கும் . . .
மனது ஆசைவயப்படாமலிருந்தால் !
மனது கோபத்தின் பிடியில் அகப்படாவிட்டால் !
மனது குழப்பத்தில் உழலாவிட்டால் !
மனது எதிர்பார்ப்பை விட்டுவிட்டால் !
மனது கவலைப்படுவதை நிறுத்திவிட்டால் !
மனது பொறாமையைக் கொன்றுவிட்டால் !
மனது அஹம்பாவத்தை விட்டுவிட்டால் !
மனது பொய் சொல்வதை வெறுத்துவிட்டால் !
மனது உண்மையை ஏற்றுக்கொண்டுவிட்டால் !
மனது யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுவிட்டால் !
மனது நிதானமாக முடிவெடுத்துவிட்டால் !
நிச்சயம் . . .நினைப்பது நடக்கும் . . .
மனதில் நினைப்பது நடக்கும் . . .
உன் மனது நினைப்பதெல்லாம் நடக்கிறதா ? ? ?
பதில் உனக்குத் தெரியும் . . .
இனி நினைப்பதெல்லாம் நடக்க...
முதலில் மனதை சரி செய் . . .
மனதை சரி செய்ய . . .
உன்னை க்ருஷ்ணனிடம் தந்துவிடு . . .
உன்னை க்ருஷ்ணனிடம் தர . . .
விடாமல் நாம ஜபம் செய் . . .
விடாமல் நாம ஜபம் செய்ய , , ,
குருவை இறுக்கிப் பிடித்துக்கொள் . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக