ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 செப்டம்பர், 2011

நீ பிணமா ? ! ?

ராதேக்ருஷ்ணா


தோல்வியோ, வெற்றியோ
முயற்சியை விடாதே . . .

பெருமையோ, அவமரியாதையோ
முயற்சியை விடாதே . . .

 வாழ்வோ, சாவோ
முயற்சியை விடாதே . . .

சுகமோ, துக்கமோ
முயற்சியை விடாதே . . .

லாபமோ, நஷ்டமோ
முயற்சியை விடாதே . . .

நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ,
முயற்சியை விடாதே . . .

உதவி கிடைக்கிறதோ இல்லையோ,
முயற்சியை விடாதே . . .

உயர்வோ, தாழ்வோ
முயற்சியை விடாதே . . .

பாராட்டோ, திட்டோ
முயற்சியை விடாதே . . .

சிரிப்போ, அழுகையோ
முயற்சியை விடாதே . . .

நீ பலசாலியோ, பலவீனமோ
முயற்சியை விடாதே . . .

நீ புத்திசாலியோ, முட்டாளோ
முயற்சியை விடாதே . . .

நீ தைரியசாலியோ,பயந்தாங்கொல்லியோ,
முயற்சியை விடாதே . . .

ஆணோ,பெண்ணோ
முயற்சியை விடாதே . . .

இளவயதோ, முதியவரோ
முயற்சியை விடாதே . . .

ஏழையோ,பணக்காரரோ,
முயற்சியை விடாதே . . .

படித்தவரோ,படிக்காதவரோ,
முயற்சியை விடாதே . . .

அனாதையோ, சொந்தம் உள்ளவரோ,
முயற்சியை விடாதே . . .

அழகுள்ளவரோ,அழகில்லாதவரோ
முயற்சியை விடாதே . . .

நல்லவரோ, கெட்டவரோ
முயற்சியை விடாதே . . .

ஆஸ்தீகரோ, நாஸ்தீகரோ
முயற்சியை விடாதே . . .

 முயலாதவர் மனிதரில்லை,
பிணம்தான் முயலாதது . . .

நீ பிணமா ? ? ?
அல்லது
உயிருடன் இருக்கிறாயா ? ? ?

பிணமென்றால் முயலாதே . . .
உயிருடன் இருக்கிறாயென்றால்
உயிர் போகும் வரை முயற்சி செய் . . . 
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP