அனுமதி கொடு . . .
ராதேக்ருஷ்ணா
எல்லாம் மாறும் . . .
மாறியே தீரும் . . .
மாற்றம் வரும் என்ற
நம்பிக்கை உன் மனதில்
வந்தால் எல்லாம் மாறும் . . .
மாற்றம் என்பது
அதிசயம் அல்ல . . .
மாற்றம் என்பது
கற்பனை அல்ல . . .
மாற்றம் என்பது
திரைப்படம் அல்ல . . .
மாற்றம் என்பது
கதை அல்ல . . .
மாற்றம் என்பது
வெறும் பேச்சல்ல . . .
மாற்றம் என்பது
திட்டம் அல்ல . . .
மாற்றம் என்பது
அதிசயம் அல்ல . . .
மாற்றம் என்பது
நாவல் அல்ல . . .
மாற்றம் என்பது
உபதேசம் அல்ல . . .
மாற்றம் என்பது
மனதின் தாக்கம் . . .
மாற்றம் என்பது
மனதின் தாகம் . . .
மாற்றம் என்பது
மனதின் வேகம் . . .
மாற்றம் என்பது
மனதின் பலம் . . .
மாற்றம் என்பது
மனதின் உந்து சக்தி . . .
மாற்றம் என்பது
மனதின் பரிமாற்றம் . . .
மாற்றம் என்பது
மனதின் தேடல் . . .
மாற்றம் என்பது
தொலை நோக்கு . . .
மாற்றம் என்பது
வெளியில் இல்லை . . .
மாற்றம் என்பது
உன்னுள் இருக்கிறது . . .
மாற்றம் உன்னுள்
வந்தால் வெளியில் வரும் . . .
மாற்றம் உன்னுள்
வந்தாலே உன் வாழ்க்கை மாறும் . . .
உன்னுள் மாற்றமே
உன் உலகின் மாற்றம் . . .
உன்னைக் கொஞ்சம் மாற்று . . .
உன்னை மாற்றிக்கொள்ள
கொஞ்சம் நீ அனுமதி கொடு . . .
நீ உனக்குள் இருக்கும்
நல்லவனை/நல்லவளை
உன்னை மாற்ற
அனுமதி செய் . . .
பிறகு உலகையே நீ மாற்றலாம் . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக