ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

முதலீடு . . .

ராதேக்ருஷ்ணா


முதலீடு செய்திருக்கிறேன் . . .

இன்று வரை என் வாழ்வில்
நான் எதையும் இழக்கவில்லை . . .

என் வாழ்க்கை எனக்குத் தந்ததை
எல்லாம் என் வாழ்விலேயே
நான் முதலீடு செய்திருக்கிறேன் . . .

எல்லாவற்றையும் என்
வாழ்விலேயே நான் மீண்டும்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் தோல்விகளை
முடிவேயில்லாத விடாமுயற்சியில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் தவறுகளை
எதிர்காலத்தில் ஜாக்கிரதையாயிருக்க
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் சோகங்களை
குறைவில்லாத ஆனந்தத்தில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் அவமானங்களை
அழியாதப் புகழில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் பிரச்சனைகளை
நிரந்தரமான தீர்வுகளில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் அஜாக்கிரதைகளை
நல்ல சிரத்தையில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் அவநம்பிக்கைகளை
திடமான நம்பிக்கையில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் மனதின் காயங்களை
சமாதானத்தில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் பயங்களை
அசராத தைரியத்தில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் சுயநலத்தை
சுத்தமான பொதுநலத்தில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் அஹம்பாவத்தை
சரியான பணிவில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் பலவீனங்களை
அற்புதமான பலத்தில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் வியாதிகளை
ஆரோக்கியத்தில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் நஷ்டங்களை
வாழ்வின் அனுபவங்களில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் அவசரங்களை
நிதானத்தில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் சோம்பேறித்தனத்தை
குதூகலத்தில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் குழப்பங்களை
தீர்க்க ஆலோசனையில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் கேள்விகளை
தெளிந்த நல்லறிவில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் வெறுப்புகளை
குழந்தைத்தனமான சிரிப்பில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் அழுகைகளை
வைராக்கியத்தில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் அறியாமையை
உன்னதமான ஞானத்தில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் பாபங்களை
க்ருஷ்ண பக்தியில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் குற்றங்களை
க்ருஷ்ணனின் கருணையில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் வார்த்தைகளை
பகவன் நாம ஜபத்தில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் எண்ணங்களை
சரணாகதி தத்துவத்தில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .


என் காமத்தை
ராதாவின் ப்ரேமையில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

என் வாழ்வை
சத்குருவின் திருவடிகளில்
முதலீடு செய்திருக்கிறேன் . . .

இந்த வாழ்வில் நான்
எல்லாவற்றையும் முதலீடு
செய்துவிட்டேன் . . .

என்னிடம் எதுவும் பாக்கியில்லை . . .

என் வாழ்க்கை இனித் தரப்போவதையும்
முழுவதுமாக முதலீடு செய்துவிடுவேன் . . .

பலன் பலமடங்காகும் . . .

என்னை நான் சத்சங்கத்தில் முதலீடு
செய்துவிட்டேன் . . .

என்னைக் காப்பாற்றும் பொறுப்பை
பக்தர்களிடம்
முதலீடு செய்துவிட்டேன் . . .

இனி எனக்கென்ன குறைச்சல் . . .

நான் ஒரு ராஜா . . .

வந்தால் வரட்டும் மரணம் . . .

மரணத்தையும் முக்தியில்
முதலீடு செய்துவிட்டேன் . . .

முக்தியையும் க்ருஷ்ணனிடத்தில்
முதலீடு செய்துவிட்டேன் . . .

நான் சுகவாசி . . .

நீயும் உடனே முதலீடு செய் . . .
என்னவெல்லாம் உன்னிடம் உண்டோ
உடனே முதலீடு செய் . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP