உனக்குள்ளே . . .
ராதேக்ருஷ்ணா
நீ பயப்படுகிறாயா ?
என் பயம் என்னை விட்டுப் போகிறது...
என்று சொல் !
ஒரு நாள் பயம் போனதை உணர்வாய் . . .
நீ கவலைப்படுகிறாயா ?
என் கவலைகள் தீர்ந்துவிட்டது...
என்று சொல் !
ஒரு நாள் கவலை போய்விட்டதை அறிவாய் . . .
நீ குண்டாக இருக்கிறாயா ?
நான் இளைத்து விட்டேன் . . .
என்று சொல் !
ஒரு நாள் நீ இளைத்ததை உணர்வாய் . . .
நீ பலவீனமாக இருக்கிறாயா ?
நான் பலமாக இருக்கிறேன் . . .
என்று சொல் !
ஒரு நாள் உன் பலத்தை அறிவாய் . . .
நீ முட்டாளாக இருக்கிறாயா ?
நான் முட்டாள் இல்லை . . .
என்று சொல் !
ஒரு நாள் உன் அறிவை உலகம் சொல்லும் . . .
நீ தோற்றுக்கொண்டே இருக்கிறாயா ?
நான் வெற்றி அடைகிறேன் . . .
என்று சொல் !
ஒரு நாள் உன் வெற்றியை உலகம் பேசும் . . .
நீ நோய்வாய்ப்பட்டிருக்கிறாயா ?
நான் ஆரோக்கியமாயிருக்கிறேன் . . .
என்று சொல் !
ஒரு நாள் உடலின் சக்தியை உணர்வாய் . . .
உன்னால் முடியவில்லையா ?
என்னால் எல்லாம் முடியும் . . .
என்று சொல் !
ஒரு நாள் நீ செய்து முடிப்பாய் . . .
உன் வாழ்க்கையில் பிரச்சனைகளா ?
ஒரு பிரச்சனையும் எனக்கு இல்லை . . .
என்று சொல் !
ஒரு நாள் உன் வாழ்வின் சுகம் புரியும் . . .
ஏமாந்துகொண்டேயிருக்கிறாயா ?
நான் ஏமாறமாட்டேன் . . .என்று சொல் !
ஒரு நாள் யாரும் உன்னை ஏமாற்றமுடியாத
நிலை சத்தியமாய் வரும் . . .
சொல் . . .
உன் மனதிடம் சொல் . . .
யாருமில்லாதபோதும் சொல் . . .
யாரிருந்தாலும் ரகசியமாய்
உன் மனதிடம் சொல் . . .
சொல்லிக்கொண்டேயிரு . . .
உன் மனதிடம் நீ பேசு . . .
உன்னை நீ கவனி . . .
உனக்கு நீயே உதவி செய் . . .
உனக்கு நீயே சேவகன் / சேவகி !
உனக்கு நீயே தலைவன் / தலைவி !
உனக்கு நீயே தோழன் / தோழி !
உன் தேவைகள் உனக்குள்ளே . . .
உன் ஆனந்தங்கள் உனக்குள்ளே . . .
உன் வெற்றிகள் உனக்குள்ளே . . .
உனக்கான தீர்வுகள் உனக்குள்ளே . . .
உனக்கு பதில்கள் உனக்குள்ளே . . .
உன் வழி உனக்குள்ளே . . .
உன் பலம் உனக்குள்ளே . . .
உனக்கான உதவிகள் உனக்குள்ளே . . .
உன் ஆரோக்கியம் உனக்குள்ளே . . .
உன் தைரியம் உனக்குள்ளே . . .
உன் திட்டங்கள் உனக்குள்ளே . . .
உன்னுடைய பதவிகள் உனக்குள்ளே . . .
உனது மதிப்பு உனக்குள்ளே . . .
உன் முயற்சிகள் உனக்குள்ளே . . .
உன் சாதனைகள் உனக்குள்ளே . . .
உன் வாழ்க்கை உனக்குள்ளே . . .
எல்லாம் உனக்குள்ளே . . .
உன் க்ருஷ்ணனும் உனக்குள்ளே . . .
வெளியை மறந்து உன்னுள் நுழை ! ! !
உலகை ஒதுக்கி உனக்குள் தேடு ! ! !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக