ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 அக்டோபர், 2011

திறந்து பார் . . .

ராதேக்ருஷ்ணா


உன் மனதைத் திறந்து வை !

உலகம் உனக்கு நிறைய
நல்லதைத் தருகிறது !
முழுவதுமாக வாங்கிக்கொள்ள
உன் மனதைத் திறந்து வை !

க்ருஷ்ணன் உனக்கு எல்லா
உதவிகளையும் செய்கிறான் !
முழுவதுமாக உதவிபெற
உன் மனதைத் திறந்து வை !

இயற்கை உனக்கு எல்லையில்லா
சுகத்தை வழங்கிக்கொண்டேயிருக்கிறது !
முழுவதுமாக அனுபவிக்க
உன் மனதைத் திறந்து வை !

வாழ்க்கை உன்னை உயர்த்த
எல்லா சிறந்த வழிகளையும் காட்டுகிறது !
முழுவதுமாக உபயோகப்படுத்த
உன் மனதைத் திறந்து வை !

உன் மனதைத் திறவாமல்
யாரிடம் கோபித்து என்ன பயன் ?

உன் மனதைத் திறவாமல்
யாரிடம் புலம்பி என்ன பயன் ?

உன் மனதைத் திறவாமல்
யாரைப் பழித்து என்ன பயன் ?

உன் மனதைத் திறவாமல்
வாழ்வை வெறுத்து என்ன பயன் ?

உன் மனதைத் திறவாமல்
தெய்வத்தைக் கடிந்து என்ன பயன் ?

உன் மனதைத் திறவாமல்
வாழ்வில் நீ எதை அடைவாய் ?

உன் மனதைத் திறவாமல்
அடுத்தவரிடம் கெஞ்சி என்ன பயன் ?

உன் மனதைத் திற . . .
அது மட்டுமே நீ செய்ய வேண்டியது ! ! !

திறந்து பார் . . .
வெற்றி நிச்சயம் . . .

உன் மனது தருவதே உன் சுகம் . . .
உன் மனது தருவதே உன் வெற்றி . . .
உன் மனது தருவதே உன் ஆரோக்கியம் . . .
உன் மனது தருவதே உன் பலம் . . .
உன் மனது தருவதே உன் வாழ்ககை . . .

உன் மனது சொல்வதையே
உலகம் உனக்குத் தருகிறது . . .


உன் மனது சொல்வதையே
இயற்கை உனக்குச் செய்கிறது . . .


உன் மனது சொல்வதையே
வாழ்க்கை உனக்குக் கொடுக்கிறது . . .


உன் மனதைத் திற . . .
உடனே திறந்து பார் . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP