ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

ஹே ராம் ! ! !

ராதேக்ருஷ்ணா


ஹே ராம் ! ! !
முகம்மதியருக்கு
தனமும்,தனி நாடும்
தந்தோம் . . .
என்ன ப்ரயோஜனம் கண்டோம் ?

ஹே ராம் ! ! !
ஆங்கிலேயரின் மதத்திற்கு
மதமாற்ற உரிமையும், சலுகையும்
தந்தோம் . . .
என்ன ப்ரயோஜனம் கண்டோம் ?

ஹே ராம் ! ! !
சிறுபான்மையினருக்கு 
நம் கோவில் வருமானத்தையும்,இடத்தையும்
தந்தோம் . . .
என்ன ப்ரயோஜனம் கண்டோம் ?

ஹே ராம் ! ! !
அஹிம்சை என்று சொல்லிக்கொண்டு
காஷ்மீரத்தில் மௌனமாய்
நிற்க்கிறோம் . . .
என்ன ப்ரயோஜனம் கண்டோம் ?

ஹே ராம் ! ! !
எம்மதமும் சம்மதம்
என்று எல்லோரையும்
வரவேற்க்கிறோம் . . .
என்ன ப்ரயோஜனம் கண்டோம் ?

ஹே ராம் ! ! !
வெளிநாட்டுப் பொருட்களை
பாரதத்தில் விற்க்க
அனுமதி தந்தோம் . . .
என்ன ப்ரயோஜனம் கண்டோம் ?

ஹே ராம் ! ! !
தாய் மொழியை வெறுத்து
நுனி நாக்கில்
ஆங்கிலம் பேசப் பழகினோம் . . .
என்ன ப்ரயோஜனம் கண்டோம் ?

ஹே ராம் ! ! !
நம் ஆரோக்கிய உணவை
மறந்து,துரித உணவைச்
சாப்பிடக் கற்றோம் . . .
என்ன ப்ரயோஜனம் கண்டோம் ?

ஹே ராம் ! ! !
என்ன ப்ரயோஜனம் கண்டோம் ?

நாடு துண்டானதை மறந்தோம் . . .
கொள்ளையரையும் மறந்தோம் . . .
அஹிம்சையையும் மறந்தோம் . . .
மதமாற்றத்தையும் மறந்தோம் . . .
கலாசாரத்தையும் மறந்தோம் . . .
சுதந்திரப் போராட்டத்தை மறந்தோம் . . .
தியாகத்தை மறந்தோம் . . .
தியாகிகளை மறந்தோம் . . .
சுதந்திரத்தையும் மறந்தோம் . . .

ஹே ராம் ! ! !
எங்களை கரையேற்று . . .

இந்தியா . . .
இந்துஸ்தானமாக மாறுவது எப்போது ? ? ?

மஹாபாரதம் சொன்ன பாரதம் எங்கே ? 

ராமாயணம் நடந்த பாரதம் எங்கே ?

ஹே ராம் . . .
எங்களுக்கு பாரதம் தா . . .

உனக்கு ஒரு கோயிலைக் கூட
அயோத்தியாவில் கட்ட முடியாத
இந்த முதுகெலும்பில்லாத
இந்துக்களைக் காக்க வா . . .

ஹே ராம் ! ! !
எல்லாவற்றையும் தந்துவிட்டு,
கேள்விக்குறியாய் நிற்கும்
எங்களைக் காக்க வா . . .

ஹே ராம் ! ! !
மற்ற மதத்தினரின்
கேலிக்கூத்தாய் ஆகிவிட்ட
உன் இந்து தர்மத்தைக் காக்க வா . . .

ஹே ராம் . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP