ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

பிரச்சனைகள் . . .

ராதேக்ருஷ்ணா
 
பிரச்சனைகள் . . .
பிரச்சனைகள் இல்லாத
மனிதரில்லை . . .
 
பிரச்சனைகள் இல்லாமல்
ஒரு வாழ்க்கையில்லை . . .
பிரச்சனைகள் இல்லாமல்
உலகின் சுழற்சி இல்லை . . .

பிரச்சனைகள் நம்
வாழ்வில் ஓர் அங்கம் . . .

பிரச்சனைகள் நம்
வாழ்வின் ஓர் ஆதாரம் . . .

பிரச்சனைகள் நம்மை
பக்குவப்படுத்தும் ஒரு ஆசான் . . .
 
பிரச்சனைகளை அணுக
நமக்குத்தான்  தெரியவில்லை . . .

நானும் பிரச்சனைகளோடு
போராடிக்கொண்டே இருக்கிறேன் . . .
பல வருடங்களாக
பிரச்சனைகளிடமிருந்து
நான் கண்டறிந்த உண்மை இதுவே !

பிரச்சனைகளைக் கண்டு
நான் பயந்தால் அது என்னை
இன்னும் பயமுறுத்தும் . . .

பிரச்சனைகளைக் கண்டு
நான் அழுதால் அது என்னை
இன்னும் அழவைக்கும் . . .

பிரச்சனைகளைக் கண்டு
நான் ஓடினால் அது என்னை
பயங்கரமாகத் துரத்தும் . . .

பிரச்சனைகளைக் கண்டு
நான் புலம்பினால் அது என்
நிம்மதியைக் கெடுக்கும் . . .

பிரச்சனைகளைப் பற்றி
நான் அடுத்தவரிடம் பேசினால்
அது என்னைப் பரிகசிக்கும் . . .

பிரச்சனைகளைக் கண்டு
நான் மனம் புழுங்கினால்
அது என்னை அசிங்கப்படுத்தும் . . .

பிரச்சனைகள் என்று தீரும்
என்று நான் ஏங்கினால் அது
என் முதுகில் சவாரி செய்யும் . . .

பிரச்சனைகள் தீராது என்று
நான் முடிவு செய்தால் அது
என் வாழ்வை சீரழிக்கும் . . .

ஆனால் இதுதானே நாம்
எல்லோரும் செய்கின்றோம் . . .

அதனால் பிரச்சனைகள்
பிரச்சனைகளல்ல . . .
நாம் அணுகும் முறைதான்
பிரச்சனை . . .

இது நான் கண்ட முதல் உண்மை . . .

அடுத்தது . . .

பிரச்சனைகளைக் கண்டு
நாம் சிரித்தால் அது நமக்கு
பலவித நன்மைகள் செய்யும் !

பிரச்சனைகளை தைரியமாகக்
கையாண்டால் அது நமக்கு
அடிமையாகிச் சேவகம் செய்யும் !

பிரச்சனைகளை எதிர்கொள்ள
நாம் காத்திருந்தால் அது நம்மைக்
கண்டு விலகி ஓடி விடும் !

பிரச்சனைகளை நாம்
புரிந்துகொண்டுவிட்டால் அது
நம் வாழ்வை வளமாக்கும் !

அதனால் பிரச்சனைகள்
எனக்கு நல்லவையே . . .

உனக்கு எப்படி ? ? ?



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP