மறந்து பார் . . .
ராதேக்ருஷ்ணா
வாழ்வில் பல
விஷயங்களை
நீ மறந்துவிட்டாய் . . .
சில விஷயங்களை
மறக்க முயற்சிக்கிறாய் . . .
சில விஷயங்களை
மறப்பதேயில்லை . . .
இப்பொழுது நான்
சொல்லப்போவதையெல்லாம்
மறந்து பார் . . .
உன் அஹம்பாவத்தை மறந்துவிட்டு
வாழ்வைப் பார் . . .
உன் சுயநலத்தை மறந்துவிட்டு
வாழ்வைப் பார் . . .
உன் பொறாமையை மறந்துவிட்டு
வாழ்வைப் பார் . . .
உன் அதிகப்பிரசங்கித்தனத்தை
மறந்துவிட்டு வாழ்வைப் பார் . . .
உன் கோபத்தை மறந்துவிட்டு
வாழ்வைப் பார் . . .
உன் விரோதத்தை மறந்துவிட்டு
வாழ்வைப் பார் . . .
உன் கெட்ட எண்ணங்களை
மறந்துவிட்டு வாழ்வைப் பார். . .
இவையெல்லாவற்றையும்
வைத்துக்கொண்டு
நீ வாழ்வைப் பார்ப்பதால்தான்
உன் வாழ்க்கை நரகமாய்த் தெரிகிறது !
இவையெல்லாவற்றையும்
நீ மறந்துவிட்டால் உன் வாழ்க்கை
க்ருஷ்ணனின் வரம் என்பது
உனக்குப் புரியும் !
இவைகளை நித்தியம்
நீ மறக்கத்தான் செய்கிறாய் !
எப்பொழுது . . .?
தூங்கும்போது . . .
முழித்திருக்கும்போதும்
நீ இவைகளை மறந்துவிட்டால் . . .
ஆஹா . . .
சீக்கிரம் மறந்துவிடேன் . . .
இந்த மறதி உனக்கு வர
நான் க்ருஷ்ணனிடம் ப்ரார்த்திக்கிறேன் . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக