ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Thursday, November 12, 2009

பைத்தியம் ! ! !ராதேக்ருஷ்ணா


உலகமே பைத்தியக்காரர்களின் உலகம்தான் !


சில பேர் பணப் பைத்தியம் !
சில பேர் புகழ் பைத்தியம் !
சில பேர் பெண் பைத்தியம் !
 சில பேர் அழகுப் பைத்தியம் !
சில பேர் துணிப் பைத்தியம் !
சில பேர் தொலைக்காட்சி பைத்தியம் !
சில பேர் குழந்தை பைத்தியம் !
சில பேர் அலுவலகப் பைத்தியம் !
சில பேர் விளையாட்டுப் பைத்தியம் !
 சில பேர் நண்பர்கள் பைத்தியம் !
சில பேர் பெண்டாட்டி பைத்தியம் !
சில பேர் சொந்தக்காரர்கள் பைத்தியம் !
சில பேர் கணவர் பைத்தியம் !
சில பேர் தூக்கப் பைத்தியம் !
சில பேர் ஜாதகப் பைத்தியம் !
சில பேர் ராசிக்கல் பைத்தியம் !
சில பேர் கைரேகை பைத்தியம் !
சில பேர் சாப்பாட்டுப் பைத்தியம் !
சில பேர் ஆண் பைத்தியம் !
சில பேர் உடற்பயிற்சிப் பைத்தியம் !
சில பேர் அரசியல் பைத்தியம் !
சில பேர் நாவல் பைத்தியம் !
சில பேர் செய்தித்தாள் பைத்தியம் !
சில பேர் வம்பு பைத்தியம் !
சில பேர் மருந்துப் பைத்தியம் !
சில பேர் ஆரோக்கியப் பைத்தியம் !
சில பேர் செருப்புப் பைத்தியம் !
சில பேர் பிராயணப் பைத்தியம் !
சில பேர் தற்பெருமை பைத்தியம் !
சில பேர்  செடிகள் பைத்தியம் !
சில பேர் நாட்டியப் பைத்தியம் !
சில பேர் நகைச்சுவை பைத்தியம் !
சில பேர் சண்டைப் பைத்தியம் !
சில பேர் விலங்குப் பைத்தியம் ! 
 சில பேர் இசைப் பைத்தியம் !
சில பேர் வேடிக்கைப் பைத்தியம் !

இன்னும் நிறைய பைத்தியங்கள் உண்டு !
இவை யாவும் கெடும் பைத்தியங்கள்.... 
சொல்ல ஜன்மா போதாது ! 

சில பேர் உண்மையாகவே பைத்தியம்...


இன்னும் சில பைத்தியங்களும் உண்டு !
நல்ல பைத்தியங்கள் ......

அஷ்டசகிகள் ராதிகா பைத்தியம் !
சத்ருக்னன் பரத பைத்தியம் !
சுகப்ரம்மம் ஸ்ரீமத் பாகவத பைத்தியம் !
 தயிர்க்காரி இராமானுஜ பைத்தியம் !
திருக்கச்சி நம்பிகள் கைங்கர்ய பைத்தியம் !
ஜடபரதர் தத்துவ பைத்தியம் !
க்ருஷ்ண சைதன்யர் ப்ருந்தாவன பைத்தியம் ! 
 வாதிராஜர் ஹயக்ரீவ பைத்தியம் !
ஹாதிராம் பாவாஜீ ஸ்ரீநிவாச பைத்தியம் !
சஞ்சயன் பகவத் கீதை பைத்தியம் !
 மதுரகவியாழ்வார் சடகோப பைத்தியம் !
நம்பாடுவான் ஏகாதசி பைத்தியம் !
துளசிதாசர் ஆஞ்சனேய பைத்தியம் !
பரீக்ஷித் ஸ்ரவண பைத்தியம் !
சூதபௌராணிகர் கீர்த்தன பைத்தியம் !
இளையாற்று நம்பி உத்சவ பைத்தியம் ! 
திருமலை நல்லான் வைஷ்ணவ பைத்தியம் !
விதுரர் க்ஷேத்ராடன பைத்தியம் ! 
பிள்ளை உறங்காவில்லி காவல் பைத்தியம் !
பீமன், அர்ச்சனை பைத்தியம் !
கொங்கில் பிராட்டி, பாதுகை பைத்தியம் !
ஹரிதாஸ் யவன், ஜப பைத்தியம் !
சிளா பாய் பூஜை பைத்தியம் !
தான்சேன் பஜனை பைத்தியம் !
கம்பன் ராமாயண பைத்தியம் !
 திருக்கண்ணமங்கை ஆண்டான் சரணாகதி பைத்தியம் !
ரூப கோஸ்வாமி ப்ரேம பைத்தியம் !
ஹித ஹரி வம்சர் ராசக்ரீடை பைத்தியம் !  
  
ஜகதானந்தர் குரு பைத்தியம் ! 
சத்ரபதி சிவாஜி இந்து பைத்தியம் ! 
ராதிகா க்ருஷ்ண பைத்தியம் ! 
குருஜீ அம்மா பகவன் நாம பைத்தியம் !

இன்னும் பல நல்ல பைத்தியங்கள் உண்டு ! இதில் நீ எந்த பைத்தியம் ?

கெடும் பைத்தியமா ?

நல்ல பைத்தியமா ?

இரண்டும் கலந்த கலவையா ?

கலவை . . . . .இதுதானே உன் பதில் . . .


தீர்மானித்து, உடனே திருந்து !

 
 நேரம் உன்னை தின்று  கொண்டிருக்கிறது ...

சீக்கிரம்.....
பல கோடி ஜன்மாவாக
ஒரு பைத்தியம் உனக்காகக்
காத்துக்கொண்டிருக்கிறது.....

வேறு யார்....நம் பகவான் க்ருஷ்ணன்தான்....

அவனே பைத்தியம்தானே !

பக்த பைத்தியம் . . . 
 

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP