என் குருவே சரணம் ! ! !
ராதேக்ருஷ்ணா
எதையோ பேச மாட்டேன் ....
குருவின் பெருமையைப் பேசுவேன் !
எதையோ நினைக்க மாட்டேன் . . .
குருவை மட்டும் நினைப்பேன் !
எதையோ தேட மாட்டேன் . . .
குரு சொல்வதைத் தேடுவேன் !
கண்டதையும் கேட்க மாட்டேன் . . .
குரு வார்த்தையைக் கேட்ப்பேன் !
எங்கேயோ போகமாட்டேன் . . .
குரு திருமாளிகைக்குப் போவேன் !
எதற்காகவும் அழமாட்டேன் . . .
குருக்ருபைக்காக அழுவேன் !
யாருக்கும் அடிமையாகமாட்டேன் . . .
குருவிற்கு அடிமையாய் இருப்பேன் !
எங்கேயோ சுற்றமாட்டேன் . . .
குருவை ப்ரதக்ஷிணம் செய்வேன் !
கண்டதையும் தலையில் ஏற்றமாட்டேன் . . .
குரு சரணத்தை மட்டும் வைத்துக்கொள்வேன் !
எல்லோரையும் நம்பமாட்டேன் . . .
குருவை திடமாக நம்புவேன் !
யாரிடமும் ஆலோசனைக் கேட்கமாட்டேன் . . .
குருவிடம் தைரியமாகக் கேட்பேன் !
எதையோ படிக்கமாட்டேன் . . .
எதையோ படிக்கமாட்டேன் . . .
குரு சொல்வதைப் படிப்பேன் !
எதை எதையோ எழுதமாட்டேன். . .
குரு சொல்வதை எழுதுவேன் !
எல்லோரையும் புரிந்துகொள்ள
முயற்சிக்கவே மாட்டேன் . . .
குருவைப் புரிந்துகொள்ள
விடாமுயற்சி செய்வேன்!
கண்டதற்கும் சிரிக்க மாட்டேன் . . .
குருவின் சங்கேத வார்த்தைகளில்
ஆனந்தமாய் சிரிப்பேன்!
எதையெதையோ சாப்பிடவே மாட்டேன் . . .
குரு ப்ரசாதத்தைச் சாப்பிடுவேன் !
எல்லோரையும் வணங்க மாட்டேன் . . .
குருவை வணங்குவேன் !
கண்டதையும் ஞாபகம்
வைத்துக்கொள்ளமாட்டேன் . . .
குருவை மறக்கவே மாட்டேன் !
எல்லோர் சொல்வதையும் செய்யமாட்டேன் . . .
குருவிற்கு கைங்கர்யம் செய்வேன் !
எல்லோரையும் கொண்டாடமாட்டேன் . . .
குருவை தலையில் வைத்துக் கொண்டாடுவேன்!
கண்டவரோடு பழக மாட்டேன் . . .
குருவிடம் பக்தியுடன் பழகுவேன் !
என்னிஷ்டத்திற்கு வாழமாட்டேன் . . .
குரு சொல்வதுபோல் வாழ்வேன் !
எனக்குப் பிடித்ததை ஜபிக்க மாட்டேன் . . .
குரு உபதேசித்ததை மட்டும் ஜபிப்பேன்!
எல்லோரிடமும் நல்ல பெயர்
வாங்க ஆசைப்படவேமாட்டேன் . . .
குருவிடம் நல்ல பெயர் வாங்குவேன் !
யாரிடமும் என் கஷ்டத்தைக் கூறமாட்டேன் . . .
குருவிடம் சத்தியமாகக் கூறுவேன் !
எல்லோருக்கும் கொடுக்கமாட்டேன் . . .
குருவிற்கு எல்லாவற்றையும் கொடுப்பேன் !
எல்லோரிடமும் உள்ளதை சொல்லமாட்டேன் . . .
குருவிடம் எதையும் மறைக்கமாட்டேன் !
எதற்கும் பயப்படமாட்டேன் . . .
குரு வார்த்தையை மீறுவதற்கு நடுங்குவேன் !
எதற்கும் ஏங்க மாட்டேன் . . .
குருவின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குவேன் !
எதையோ சேமிக்க மாட்டேன் . . .
குரு அருளை சேமித்து வைப்பேன்!
கண்டதையும் வாங்கமாட்டேன் . . .
குருவிடம் ஆசீர்வாதத்தை வாங்குவேன் !
எல்லாவற்றிற்கும் காத்திருக்க மாட்டேன் . . .
குருவுக்காக எப்போதும் காத்திருப்பேன் !
குருவே சரணம் !
சத்குருவே சரணம் !
என் குருவே சரணம் !
என் குருஜீ அம்மாவே சரணம் !
சர்வம் குரு அர்ப்பணம் !
எனக்கென்ன குறை !
என் குரு இருக்க எனக்கென்ன குறை !
எதை எதையோ எழுதமாட்டேன். . .
குரு சொல்வதை எழுதுவேன் !
எல்லோரையும் புரிந்துகொள்ள
முயற்சிக்கவே மாட்டேன் . . .
குருவைப் புரிந்துகொள்ள
விடாமுயற்சி செய்வேன்!
கண்டதற்கும் சிரிக்க மாட்டேன் . . .
குருவின் சங்கேத வார்த்தைகளில்
ஆனந்தமாய் சிரிப்பேன்!
எதையெதையோ சாப்பிடவே மாட்டேன் . . .
குரு ப்ரசாதத்தைச் சாப்பிடுவேன் !
எல்லோரையும் வணங்க மாட்டேன் . . .
குருவை வணங்குவேன் !
கண்டதையும் ஞாபகம்
வைத்துக்கொள்ளமாட்டேன் . . .
குருவை மறக்கவே மாட்டேன் !
எல்லோர் சொல்வதையும் செய்யமாட்டேன் . . .
குருவிற்கு கைங்கர்யம் செய்வேன் !
எல்லோரையும் கொண்டாடமாட்டேன் . . .
குருவை தலையில் வைத்துக் கொண்டாடுவேன்!
கண்டவரோடு பழக மாட்டேன் . . .
குருவிடம் பக்தியுடன் பழகுவேன் !
என்னிஷ்டத்திற்கு வாழமாட்டேன் . . .
குரு சொல்வதுபோல் வாழ்வேன் !
எனக்குப் பிடித்ததை ஜபிக்க மாட்டேன் . . .
குரு உபதேசித்ததை மட்டும் ஜபிப்பேன்!
எல்லோரிடமும் நல்ல பெயர்
வாங்க ஆசைப்படவேமாட்டேன் . . .
குருவிடம் நல்ல பெயர் வாங்குவேன் !
யாரிடமும் என் கஷ்டத்தைக் கூறமாட்டேன் . . .
குருவிடம் சத்தியமாகக் கூறுவேன் !
எல்லோருக்கும் கொடுக்கமாட்டேன் . . .
குருவிற்கு எல்லாவற்றையும் கொடுப்பேன் !
எல்லோரிடமும் உள்ளதை சொல்லமாட்டேன் . . .
குருவிடம் எதையும் மறைக்கமாட்டேன் !
எதற்கும் பயப்படமாட்டேன் . . .
குரு வார்த்தையை மீறுவதற்கு நடுங்குவேன் !
எதற்கும் ஏங்க மாட்டேன் . . .
குருவின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குவேன் !
எதையோ சேமிக்க மாட்டேன் . . .
குரு அருளை சேமித்து வைப்பேன்!
கண்டதையும் வாங்கமாட்டேன் . . .
குருவிடம் ஆசீர்வாதத்தை வாங்குவேன் !
எல்லாவற்றிற்கும் காத்திருக்க மாட்டேன் . . .
குருவுக்காக எப்போதும் காத்திருப்பேன் !
குருவே சரணம் !
சத்குருவே சரணம் !
என் குருவே சரணம் !
என் குருஜீ அம்மாவே சரணம் !
சர்வம் குரு அர்ப்பணம் !
எனக்கென்ன குறை !
என் குரு இருக்க எனக்கென்ன குறை !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக