ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 10 நவம்பர், 2009

ராசிக்கல் ! ! !



ராதேக்ருஷ்ணா



 ராசிக்கல் வேண்டுமா ராசிக்கல் !


தோஷம் இல்லாத ராசிக்கல் !
சந்தோஷம் தரும் ராசிக்கல் !

கையில் போடவேண்டாத ராசிக்கல் !
கழுத்தில் மாட்டமுடியாத ராசிக்கல் !  

குடும்பத்தைக் காப்பாற்றும் ராசிக்கல் !
குலத்தை வாழவைக்கும் ராசிக்கல் !

ப்ரச்சனைகள் தீர்க்கும் ராசிக்கல் !
தடைகளை நீக்கும் ராசிக்கல் !

 வ்யாதிகளைத் தீர்க்கும் ராசிக்கல் !
ஆரோக்யம் தரும் ராசிக்கல் !  

கல்யாணம் நடத்தித் தரும் ராசிக்கல் ! 
கடவுளின் தரிசனம் தரும் ராசிக்கல் !

வேலையைத் தரும் ராசிக்கல் !
வேலையைக் காப்பாற்றும் ராசிக்கல் !

தொலைந்ததைத் தரும் ராசிக்கல் !
தொலைக்கமுடியாத ராசிக்கல் !

திருட முடியாத ராசிக்கல் !
திருந்த வைக்கும் ராசிக்கல் ! 

தைரியம் தரும் ராசிக்கல் !
விவேகம் தரும் ராசிக்கல் !

பக்தியில் கிடைக்கும் ராசிக்கல் !
பக்தி தரும் ராசிக்கல் !

ஞானம் தரும் ராசிக்கல் !
வைராக்யம் தரும் ராசிக்கல் !

உணவு, உடை, உறைவிடம் தரும் ராசிக்கல் !
உள்ளத்தை கொள்ளையடிக்கும் ராசிக்கல் !

பாவம் தீர்க்கும் ராசிக்கல் !
பக்குவம் தரும் ராசிக்கல் ! 

முன்வினை அழிக்கும் ராசிக்கல் ! 
முக்தி தரும் ராசிக்கல் !

ஏமாற்றாத ராசிக்கல் !
ஏங்கவைக்கும் ராசிக்கல் !

நாமம் சொல்லவைக்கும் ராசிக்கல் !
நல்லன எல்லாம் தரும் ராசிக்கல் !

பக்தர்களின் ராசிக்கல் !
பரந்தாமனின் ராசிக்கல் !









பாண்டுரங்கனின் பக்தர்களுக்கு
அவன் நிற்கும்
செங்கல்லே ராசிக்கல் !

விஷ்ணுவை ஆராதிப்பவர்களுக்கு
அவன் உறையும் 
சாலக்ராமமே ராசிக்கல் !

க்ருஷ்ணனை கொஞ்சுபவர்களுக்கு
அவன் தூக்கின 
கோவர்தனத்தின் சிறுகல்லே ராசிக்கல் !

ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமியின் பக்தர்களுக்கு
அவர் சன்னதியின் 
ஒற்றைக்கல்தான் ராசிக்கல் !

திருநறையூர் வாசிகளுக்கு
பகவானை சுமந்து உலாவரும்
கல் கருடனே ராசிக்கல் !

திருஎவ்வுள் செல்பவர்களுக்கு
வ்யாதியை சரிசெய்யும்
உப்புக்கல்லே ராசிக்கல் !

சீதாபிராட்டிக்கு
ராமனோடு வனவாசத்தில்
நதிதீரத்தில் ராமனைத்
தோற்கடித்து தான் அமர்ந்த
கல்லே ராசிக்கல் !

வானரக்கூட்டத்திற்கு
ஸ்ரீ ராமனுக்கு சகாயம்
செய்ய, பாலம் கட்ட
கொண்டுவந்தவைகளே
ராசிக்கற்கள் !
   
ப்ருந்தாவனத்தின்
 க்ருஷ்ண பைத்தியங்களுக்கு,
அங்கு காணும்
எல்லா கல்லுமே
ராசிக்கற்கள்தான் !

ராதிகாவின் பக்தர்களுக்கு
அவளை தரிசனம் செய்ய
 பர்சானாவில் பக்தியில் ஏறும்
படிக்கட்டுகளின் கற்களே
ராசிக்கற்கள் !

மதுரகவியாழ்வாருக்கு
ஸ்வாமி நம்மாழ்வாரைக்
கண் திறக்க வைத்த
குண்டுக்கல்லே
ராசிக்கல் ! 
  
குலசேகர ஆழ்வாருக்கு
திருமலை திருப்பதி
ஸ்ரீநிவாஸனின்
அருகிலிருக்கும் படியே
ராசிக்கல் !

 திருமங்கையாழ்வாருக்கு
ஸ்ரீரங்கநாதனின்
மதில் கைங்கர்யத்திற்கு
உபயோகமான கற்களே
ராசிக்கற்கள் ! 

ஸ்வாமி ராமானுஜருக்கு
தன்னிடம் சிஷ்யனாக 
திருக்குறுங்குடி நம்பி
லீலை செய்த பரிவட்டப்பாறையே
ராசிக்கல் !

கபீர்தாஸருக்கு கங்கையின்
படித்துறையில் குரு திருவடியால்
தான் மிதிபட்ட படிக்கல்லே
ராசிக்கல் !

சாருகாதாஸருக்கு க்ருஷ்ணனை
புரிந்துகொள்ள காரணமான
அவர் தொலைத்த
எடைக்கற்களே
ராசிக்கற்கள் !

பத்ராசல ராமதாஸருக்கு
அவர் கட்டிய பத்ராசல
ராமனின் கோயிலின்
கற்களே ராசிக்கற்கள் !

சனாதன கோஸ்வாமிக்கு
க்ருஷ்ணன் தானே ப்ரதக்ஷிணம்
பண்ணிக்கொடுத்த
சிறு கல்லே
ராசிக்கல் !

ரகுநாததாஸருக்கு
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யர்
பூஜை செய்ய கொடுத்த
கோவர்தன கல்லே
ராசிக்கல் !

ஸ்ரீ இராகவேந்திரருக்கு
ஸ்ரீ ராமன் அமர்ந்த பாறையே
தன் ஜீவ சமாதி
ப்ருந்தாவனத்திற்கு
ராசிக்கல் !

ஜனாபாயிக்கு
அவளோடு கண்ணன்
மாவு அரைத்த
எந்திரக் கல்லே
ராசிக்கல் ! 

தனாசாடருக்கு
அவருடைய குரு தந்த
கருப்பு கூழாங்கல்லே
க்ருஷ்ண தரிசனம் தந்த
ராசிக்கல் !

ஸ்வாமி விவேகானந்தருக்கு
சமாதி நிலை
சித்தித்த
கன்னியாகுமரி பாறையே
ராசிக்கல் !

இன்னும் பல கோடி ராசிக்கல் உண்டு !

கல்லாய் கிடக்கும்
மனிதர்களின் மனதையும்
பக்தியில் கரைய வைக்கும்
இவை மட்டுமே ராசிக்கற்கள் !

இன்னும் சொல்லவா ?

கல்லோடு சம்மந்தப்பட்ட
வேலைகளில் உள்ள
உழைப்பாளிகளுக்கு,
தினம் சோறு போடும் கற்களே
அவர்களுக்கு ராசிக்கல் ! 
 

 இப்பொழுது நீ முடிவு செய் !
உன்னுடைய ராசிக்கல் எது !

இனி நவரத்தினக் கற்கள்
தேவையா ?

உனக்கும் ராசிக்கல் உண்டு !
கண்டுபிடி ! 






0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP