ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 11 நவம்பர், 2009

விசேஷ கீதை ! ! !



 ராதேக்ருஷ்ணா


அஷ்டவக்ரர், ஜனகருக்கு
சொன்னது
"அஷ்டவக்ர கீதை"

யமதர்மராஜன், நசிகேதனுக்கு
சொன்னது
"யம கீதை" 

ஸ்ரீ ராமர் பரதனுக்கு
சொன்னது
"ராம கீதை"

ஸ்ரீ க்ருஷ்ணன் அர்ஜுனனுக்கு
சொன்னது
"ஸ்ரீமத் பகவத் கீதை"


தர்ம வியாதர், ப்ராம்மணனுக்கு
சொன்னது
"வியாத கீதை"

ஸ்ரீ க்ருஷ்ணன் உத்தவருக்கு
சொன்னது
"உத்தவ கீதை"
  
சிவபெருமான், பார்வதிதேவிக்கு
சொன்னது
"குரு கீதை"

இது போல் இன்னும் பல கீதை உண்டு ! 


இதில் எந்த கீதை உனக்கு ?

இது எதுவும் இல்லை !

குரு இல்லாமல் எதுவும் 
உனக்குப் புரியவே புரியாது ! 

அதனால்....... 

உன் குரு
உனக்குச் சொல்லும்
உபதேசங்களே
உனக்கு கீதை . . .


விசேஷ கீதை ! ! !



அதன் பிறகு தான் எதுவும் புரியும் !

 விசேஷ கீதையை அநுபவித்தவர்களே
பகவானுக்கு ப்ரியமானவர்கள் . . .


நாரதர் சொன்னதை கேட்டதாலேயே
ப்ரஹ்லாதன் நரசிம்மரைக் கண்டான் !

நாரதர் வார்த்தையை மதித்ததால்தான்
த்ருவன் ஸ்ரீ ஹரியை வசப்படுத்தினான் !

நாரதர் உபதேசத்தை நம்பியதால்தான்
ரத்னாகரன் வால்மீகியானார் !

நாரதர் வாக்கியத்தைப் பின்பற்றியதால்
வேதவ்யாசர் பாகவதம் எழுதினார் !

சுகப்ரம்ம ரிஷியின் வார்த்தையே
பரீக்ஷித்திற்கு மோக்ஷம் கிடைத்தது !

சூதபௌராணிகரின் உபதேசமே
சௌனகாதி ரிஷிகளுக்கு பாகவதம் புரிந்தது !
  

வசிஷ்டரின் தீர்மானமான வார்த்தைகளே
விஸ்வாமித்திரரை ப்ரும்மரிஷி ஆக்கியது !

கபிலரின் தெளிவான விளக்கங்களே
தேவஹூதியை முக்தியடைய செய்தது ! 
 
சமர்த்த ராம தாஸர் வார்த்தையே
சத்ரபதி சிவாஜியை ஜெயிக்க வைத்தது !

 பெரியாழ்வாரின் உபதேசம் மட்டுமே
ஆண்டாளுக்கு ரங்கனைத் தந்தது !

ரைதாஸரின் உபதேசத்தால் ராஜகுமாரி
மீரா கிரிதரகோபாலனை வசப்படுத்தினாள் !

மணக்கால் நம்பி சொன்னதை கேட்டே
ஆளவந்தார் சத்தியத்தை உணர்ந்தார் !

 க்ருஷ்ண சைதன்யரின் வார்த்தைகளே
 கொலைகாரன் நௌரோஜியை பக்தனாக்கியது !

இன்னும் சொல்லுவேன் !
பல்லாயிரம் கோடி ஜன்மா வேண்டும் !

 குரு வார்த்தைப்படி நட !

ஒரு நாள் நீயும் உணர்வாய் !

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் . . . . .

புரிந்ததா ? ! ?

உனக்கென்று ஒரு கீதை . . .

கேட்கிறதா ! ! !

விசேஷ கீதை .. .. .. 
 


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP