ஆனந்தவேதமாகட்டும் !
ராதேக்ருஷ்ணா
எதற்கும் அகம்பாவப்படாதே !
என்னைப்போல் அழகு யாருமில்லை
என்று நினைக்காதே !
என்னைப்போல் புத்திசாலியில்லை
என்று நினைக்காதே !
என்னைப்போல் படித்தவர்களில்லை
என்னைப்போல் அமைதியாக இருக்கத் தெரியவில்லை என்று நினைக்காதே !
என்னைப்போல் நோயாளிகளை
நிதானமாக கவனிப்பார்களில்லை
என்று நினைக்காதே !
என்று நினைக்காதே !
என்னைப்போல் சமையல் செய்ய
ஆளில்லை என்று நினைக்காதே !
என்னைப்போல் அழகாகக் கோலம் போடத் தெரியவேண்டுமென்று நினைக்காதே!
என்னைப்போல் சுத்தமாக இருக்க
வேண்டாமா? என்று நினைக்காதே !
என்னைப்போல் ஒழுங்காக துணி உடுத்தத்
தெரியவில்லை என்று நினைக்காதே !
என்னைப்போல் எல்லோரிடமும் அன்பு காட்டவேண்டாமா என்று நினைக்காதே!
என்னைப்போல் அடுத்தவர்களுக்கு
யார் உதவுகிறார்கள் ? என்று நினைக்காதே !
என்னைப்போல் வீட்டை சுத்தமாக
வைப்பவர்கள் யார்?என்று நினைக்காதே !
நான் குழந்தைகளை நன்றாக
வளர்த்திருக்கிறேன் என்று நினைக்காதே !
என்னைப்போல் பொறுப்பாக இருப்பவர்களுண்டா என்று நினைக்காதே !
எனக்கு இந்த விஷயங்கள்
அத்துப்படி என்று நினைக்காதே !
நான் மற்றவர்களுக்காக நிறைய
விஷயங்களை த்யாகம் செய்கின்றேன்
என்று நினைக்காதே !
என் குடும்பத்திற்காக நான் நிறையக்
கஷ்டப்பட்டிருக்கிறேன் என்று நினைக்காதே !
என்னைப்போல் உழைக்கிற இடத்தை
கோவிலாக யாரும் மதிப்பதில்லை
என்று நினைக்காதே !
என்னைப்போல் உபசரிக்க தெரிந்து
கொள்ளவேண்டும் என்று நினைக்காதே !
என்னைப்போல் ஒளிவு மறைவில்லாமல்
யாரிருக்கிறார்கள் என்று நினைக்காதே !
என் குழந்தைகளைப்போல் உலகில்
யாருண்டு என்று நினைக்காதே !
என்னைப் போல் யார் அழகாக
நந்தவனம் வைத்திருக்கிறார்கள்
என்று நினைக்காதே !
எனக்கு ரொம்ப அற்புதமாக
பூத்தொடுக்கத்தெரியும் என்று நினைக்காதே !
எனக்கு எல்லா விஷயத்திலும்
நல்ல தைரியம் உண்டு என்று நினைக்காதே !
என்னைப்போல் ஜாக்கிரதையாக
இருக்கவேண்டாமா என்று நினைக்காதே !
நான் அழகாக திட்டமிட்டு காரியங்கள்
செய்வேன் என்று நினைக்காதே !
என் குடும்பத்திலேயே நான்மட்டும்தான்
வித்தியாசம் என்று நினைக்காதே !
நான் என் குடும்பத்தை ஒழுங்காக
நடத்துகின்றேன் என்று நினைக்காதே !
என்னைப்போல் நோயாளிகளை
நிதானமாக கவனிப்பார்களில்லை
என்று நினைக்காதே !
என்னைப்போல் விஷயங்களை
யதார்த்தமாக புரிந்துகொண்டு
நடக்கத்தெரியவேண்டும்
என்று நினைக்காதே !
என்னுடைய சமயோசித புத்தியினால்
பெரிய ஆபத்து விலகியது
என்று நினைக்காதே !
எனக்கு நிறைய ஸ்லோகங்கள்
தெரியும் என்று நினைக்காதே !
நான் தினமும் விடாமல் பாராயணம்
செய்கின்றேன் என்று நினைக்காதே !
நான் நிறைய நாம ஜபம்
செய்கின்றேன் என்று நினைக்காதே !
நான் தினமும் விடாமல் கோவிலுக்குப் போகின்றேன் என்று நினைக்காதே !
என்னைப்போல் கோயிலில் யாரும்
கைங்கர்யம் செய்கிறார்கள்
என்று நினைக்காதே !
இன்னும் சொல்லிக்கொண்டிருக்கலாம் !
உன்னால் தாங்கமுடியாது !
அதனால் இனி நான்தான்,
என்னைப் போல் என்ற எண்ணங்களை
மாற்றிக்கொள் !
உன்னைவிட உயர்ந்தவர்கள்
உலகத்தில் கோடிபேர் உண்டு !
நீ எந்த விஷயத்தில் அகம்பாவப்படுகிறாயோ
அதுவே உனக்கு அடி கொடுக்கும் !
பகவானுக்குப் பிடிக்காதது
அகம்பாவமே !
க்ருஷ்ணன் க்ருபையின்றி
என்ன செய்துவிடுவாய் ?
தூங்கும்போது எப்படி
அகம்பாவமில்லாமல்
இருக்கிறாயோ அதுபோல்
விழித்துக்கொண்டிருக்கும் போதும்
இருக்க விடாது நாம ஜபம் செய் !
உன்னுடைய அத்தனை
நல்ல விஷயங்களும்
க்ருஷ்ணன் உனக்கிட்ட பிச்சை !
உன்னுடைய கெட்ட சிந்தனைகளும்,
காரியங்களும், முட்டாள்தனங்களுமே
உன்னுடையவை . . .
அதலால் அகம்பாவமே வேண்டாம் . . .
உன் அகம்பாவம்தான்
உன்னுடைய சகல விதமான
துன்பங்களுக்கும் காரணம் . . .
அதனால் க்ருஷ்ணனிடம்
சரணாகதி செய்து
அகம்பாவ ராக்ஷசனை
வதம் செய்ய ப்ரார்த்தனை
செய் !
அகம்பாவ ராக்ஷசன்
அழிந்து
உன் வாழ்க்கையே
ஆனந்தவேதமாகட்டும் !
குருஜீஅம்மாவிடமும்,
க்ருஷ்ணனிடம் ப்ரார்த்திக்கிறேன் . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக