ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 14 நவம்பர், 2009

ஆனந்தம் ஒளிந்திருக்கிறது . . .



ராதேக்ருஷ்ணா

குழந்தையாக இருந்தபோது
எத்தனை ஆனந்தம்...

நினைத்தாலே ஆனந்தம்...

மீண்டும் கிடைக்குமா ?
அப்படியொரு ஆனந்தம் ?

ஏன் கிடைக்காது ?

உன்னிடம்தான் அந்த
ஆனந்தம் ஒளிந்திருக்கிறது . . .

குழந்தையாய் இருந்தபோது
உன் வாழ்க்கையை நீ
யோசிக்கவில்லை . . .

குழந்தையாய் இருந்தபோது
உன் அழகைப் பற்றி நீ
அக்கறைப்படவில்லை . . .

குழந்தையாய் இருந்தபோது
உன் தேவையைப் பற்றி நீ
உணரவில்லை . . .

குழந்தையாய் இருந்தபோது நீ
உன் எதிர்காலத்தைப் பற்றி
கனவு காணவில்லை. . .

குழந்தையாய் இருந்தபோது
உன் அவமானத்தை நீ
லக்ஷியம் செய்யவில்லை . . . 
 
 குழந்தையாய் இருந்தபோது
உன் நல்லதைப் பற்றி நீ
 ஒரு நாளும் கவலைப்படவில்லை . . .

குழந்தையாய் இருந்தபோது
உன்னை மற்றவர் கொண்டாடினதை நீ
பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை . . .

குழந்தையாய் இருந்தபோது நீ
எத்தனை நேரம் தூங்கினாய் என்பதை
குறித்துக்கொள்ளவில்லை . . . 

குழந்தையாய் இருந்தபோது நீ
உன் குலத்தைப் பற்றி நீ
தெரிந்துகொள்ளவில்லை . . .

குழந்தையாய் இருந்தபோது
உன் கைரேகையைப் பற்றி
உனக்கு ஒன்றும் தெரியாது . . .

குழந்தையாய் இருந்தபோது
உன் பிறந்த நாளோ, நேரமோ
உனக்குத் தெரியாது . . . 

 குழந்தையாய் இருந்தபோது
மற்றவர் உன்னைப் பற்றி பேசுவதை
நீ தவறாக எடுத்துக்கொள்ளவில்லை . . .

குழந்தையாய் இருந்தபோது
உன் வயதைப் பற்றி நீ
கணக்கு வைத்துக் கொள்ளவில்லை . . . 

குழந்தையாய் இருந்தபோது
உன் தோல்விகளில் நீ
துவண்டு போகவில்லை . . .

 குழந்தையாய் இருந்தபோது
 உன் வெற்றிகளில் நீ
 அகம்பாவத்தில் ஆடவில்லை . . .

குழந்தையாய் இருந்தபோது
உன் உடல் வியாதிகளில் நீ
மனதை அலட்டிக்கொள்ளவில்லை . . .

குழந்தையாய் இருந்தபோதது
உன் தியாகங்களை நீ
நினைத்துப் பார்க்கவில்லை . . .
   
 குழந்தையாய் இருந்தபோது
உன் பலத்தைப் பற்றி நீ
பெருமை பேசவில்லை . . .

குழந்தையாய் இருந்தபோது நீ
வெளிவேஷம் போட்டு அடுத்தவரை
மயக்க முயற்சிக்கவில்லை . . .

குழந்தையாய் இருந்தபோது 
அடுத்தவரை ஏமாற்ற நீ அழகாக
திட்டம் தீட்டவில்லை . . .

குழந்தையாய் இருந்தபோது
அடுத்தவரின் குறைகளை, அசிங்கத்தை
நீ கேவலப்படுத்தவில்லை . . .

குழந்தையாய் இருந்தபோது
எந்தக் காரணத்தைக் கொண்டும் நீ
யாரையும் அவமானப்படுத்தவில்லை . . .

குழந்தையாய் இருந்தபோது
உன் பொறுப்புகளைப் பற்றி நீ
யாரிடமும் புலம்பவில்லை . . .

குழந்தையாய் இருந்தபோது
உன் சொத்து எவ்வளவு என்று நீ
ஒருநாளும் கவனிக்கவில்லை . . .

குழந்தையாய் இருந்தபோது
யாருக்கும் எந்த விஷயத்திலும் நீ
அறிவுரை கூறவில்லை . . .

 குழந்தையாய் இருந்தபோது
வெய்யில்,மழை,குளிர் இவைகளை நீ
கண்டுகொள்ளவில்லை . . .

 குழந்தையாய் இருந்தபோது
உலகின் எந்த நிகழ்வைப் பற்றியும் நீ
 அக்கறை கொள்ளவில்லை . . .

இப்படியே நீ யோசித்துப் பார் . . .
இன்னும் நிறைய புரியும் . . .

தினமும் நீ குழந்தையாகத்தானிருக்கிறாய் !
தூங்கும்போது மட்டும் . . .

உன் கடமைகளை செய் . . .
பொறுப்பாய் இரு . . .


மனதில் குழந்தையாய் இரு . . . 

நீ என்றுமே க்ருஷ்ண குழந்தைதான் . . .

அதனால் உன்னிடம் மட்டுமே
உன்னுடைய
ஆனந்தம் ஒளிந்திருக்கிறது  . . .




குழந்தையாய் வாழ்ந்து பார் . . . 









0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP