ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Tuesday, November 17, 2009

இனி உன் இஷ்டம் . . .
ராதேக்ருஷ்ணா


கனவு காணுவதைக் காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

கற்பனையில் பறப்பதைக் காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

புலம்புவதைக் காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .
  
பரிதவிப்பதைக் காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

மற்றவரை வெறுப்பதைக் காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

பொறாமைப்படுவதைக் காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

வம்பு பேசுவதைக் காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . . 

பயந்து நடுங்குவதைக் காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

எதையோ நினைத்து குழம்புவதைவிட
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

வயிற்றெரிச்சல் படுவதை விட
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

எதையோ உளறிக் கொட்டுவதைவிட
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

அடுத்தவர்களை குற்றம் சொல்வதைவிட
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .
 
சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி
சொல்லும் புத்தகங்களைப் படிப்பதை விட
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

பலமணிநேரம் உட்கார்ந்து, 
தொலைக்காட்சியைப் பார்ப்பதைக்காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

பல ஸ்லோகங்களை மனப்பாடம்
செய்வதைக் காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

 ஒவ்வொரு நாளும் தினசரியில்,
ராசிபலனைப் பார்ப்பதைக்காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

ஆயிரக்கணக்கில் செலவு செய்து
தியான வகுப்புகளுக்குச் செல்வதைவிட
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

யாரிடமோ சென்று உன் பெயரை
மாற்றி நேரத்தை வீணடிப்பதைக்காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

 ஜாதகம்,கைரேகை, எண்கணிதம்,
கிளிஜோஸ்யம், ஓலைச்சுவடியையும் விட
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

விரதம் இருந்து, உடம்பை வருத்தி,
 எல்லோரிடமும் உன் விரதத்தின்
தற்பெருமையைப் பேசுவதைக்காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

 உனக்குப் பிடித்தவர்களிடம்,
உன் கஷ்டத்தை சொல்வதைக் காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

உனக்குள்ளேயே பேசிப் பேசிப்
புழுங்குவதைக் காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

வாழ்க்கையை வெறுத்து எங்கேயாவது
ஓடிவிட நினைப்பதைக் காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

என்றோ நடந்த விஷயங்களை,
இது இப்படி நடந்திருக்கலாம்,
இது நடக்காமலிருந்திருக்கலாம் என்று, இப்பொழுது யோசிப்பதைக்காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

வெட்டித்தனமாக, யாருடனோ
அரட்டையடித்து பல மணி நேரத்தை
வீணடிப்பதைக்காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . . 

மனம் சமாதானமடைய,
சுற்றுலா தலங்களுக்கு விடுமுறையில்
செல்வதைக் காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

பிரச்சனையிலிருந்துத்
தப்பிக்க, தற்கொலை செய்து கொள்ள
நினைப்பதைக்காட்டிலும்
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

யாரோ உன்னை அவமானப்படுத்திப்
பேசியதை நினைத்து நினைத்து,
கோபப்படுவதைவிட
 க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . . 

சந்தோஷமாக இருந்த நாட்களை,
நினைத்து அசைபோட்டு,
ஏக்கப்பெருமூச்சு விடுவதைக்காட்டிலும்,
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . . 
  
 என்றும்,எங்கும்,எப்பொழுதும்,
ஆனந்தமாக,நிம்மதியாக,சௌக்கியமாக
வாழ்வதற்கு,இன்று,இங்கு,இப்பொழுதே
க்ருஷ்ண நாமஜபம் செய்வது நல்லது . . .

சொல்லவேண்டியதை
சொல்லிவிட்டேன் . . . இனி உன் இஷ்டம் . . .

இனி உன் இஷ்டம்
க்ருஷ்ணன் இஷ்டமாக
இருந்தால் நல்லது . . .0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP