ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Saturday, February 11, 2012

முதியோர் இல்லம் . . .

ராதேக்ருஷ்ணா
முதியோர் இல்லம் . . .

உலகிலே ஒரு நரகம் . . .
 அதுதான் முதியோர் இல்லம் . . .

 
வயதானவர்களை
தண்டிக்கும் ஒரு நரகம் . . .


பெற்றபிள்ளைகளே
பெற்றோரை தண்டிக்கும் ஒரு நரகம் . . .

தூக்கி வளர்த்தவர்களை
வளர்க்கப்பட்டவர்களே
தள்ளிவிடும் ஒரு நரகம் . . .
ஆலமரத்தை விழுதுகளே
ஒதுக்கிவைக்கும் ஒரு நரகம் . . .


உண்ணும்,உடையும்,உறைவிடமும்
தந்தவர்களை உறவுகளே
உதாசீனமாய் வைக்கும் ஒரு நரகம் . . .


கருவறையில் சுமந்தவளை,
சும்மாய் கிட என்று சிசுவே
சிறை வைக்கும் ஒரு நரகம் . . .
நெஞ்சில் சுமந்த தகப்பனை
பிள்ளையே வஞ்சித்து வைத்து
தனிமைப்படுத்தும் ஒரு நரகம் . . .
தாலாட்டு பாடினவளை
வாயார வைது பிள்ளைகளே
தவிக்கவைக்கும் ஒரு நரகம் . . .


தொப்புள்கொடி வழியாக
உணவு,உதிரம்,உயிர்,உடல்
தந்தவளுக்கு மனதில் பாரம்
தந்து நடைப்பிணமாய்
மாற்றும் ஒரு நரகம் . . .


உச்சி முகந்தவளின் எச்சில்
கசந்து அறுவருப்பாகி
உயிரோடு பாடையிலேற்றும்
ஒரு நரகம் முதியோர் இல்லம் . . .


கேட்டதையெல்லாம் தந்த
முட்டாள் தகப்பனை
அறிவு ஜீவி குழந்தைகள்
அஹம்பாவத்தால் தள்ளி
வைக்கும் ஒரு நரகம் . . .


ஐயோ . . .
முதியோர் இல்லங்கள்
இல்லாமல் போகட்டும் . . .


முதியோர் இல்லங்கள்
இருப்பதால்தானே
இந்தப் பாவிகள் பெற்றோர்களை
பாடாய்படுத்துகிறார்கள் . . .

 
வயதான காலத்தில் வேண்டுவது
வெறும் உடலில் சௌகரியம் மட்டுமல்ல !


இளவயதில் தான் தன்
குழந்தைகளுக்குத் தந்த
அன்பை திரும்பவும் அனுபவிக்கவே
வயதானவர்கள் வேண்டுவது !


அன்பைத் தராத இந்தப் பாவிகள்
தாயையும் தந்தையையும்
விஷம் தந்து கொன்றுவிடலாம் . . .க்ருஷ்ணா . . .
பெற்றோரை முதியோர் இல்லங்களில்
விடும் மஹாபாபிகளை
இங்கேயே,இப்போதே தண்டித்துவிடு !பெற்றோரை முதியோர் இல்லங்களில்
தள்ளிவிடும் பாபிகளுக்கு
வயதான காலத்தில் எல்லா
கஷ்டங்களும் வந்து சேரும் . . .இது சாபமல்ல . . .
இது சத்தியம் . . .

இது புலம்பலல்ல  . . .
இது இயற்கையின் சட்டம் . . .

இது கோபமல்ல . . .
இது தர்ம சாஸ்திரம் . . .0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP