இனியும் பொறுக்கமுடியாது ! ! !
ராதேக்ருஷ்ணா
ஸ்வாமி ராமானுஜா . . .
நான் என்ன செய்யட்டும் ?
இந்த பாரதத்தில்
மதமாற்றத்தை தடை செய்ய
நான் என்ன செய்யட்டும் ?
இந்த ஏழை ஜனங்களை
ஏமாற்றி மதம் மாற்றுபவரை
திருத்த நான் என்ன செய்யட்டும் ?
இந்து மதத்தை இழிவாகப் பேசும்
மதம் மாறினவர்களை சரி செய்ய
நான் என்ன செய்யட்டும் ?
இந்துக்களின் மனதைப் புண்படுத்தி
அதில் குளிர் காய்பவர்களை
தடுத்து நிறுத்த நான் என்ன செய்யட்டும் ?
இந்து தெய்வங்களைத்
தரக்குறைவாகப் பேசுபவர்களுக்கு
சரியான பாடம் கற்பிக்க
நான் என்ன செய்யட்டும் ?
ஐயோ . . .
என்னால் முடியவில்லை . . .
இந்த மதமாற்றத்தைப்
பார்த்துக்கொண்டு
ஊமையாய் இருக்க
என்னால் முடியவில்லை . . .
ராமானுஜா . . .
என் உயிரை எடுத்துக்கொள் . . .
ராமானுஜா . . .
என்னை எடுத்துக்கொள் . . .
ராமானுஜா . . .
என் புண்ணியத்தை எடுத்துக்கொள் . . .
ராமானுஜா . . .
என் பக்தியை எடுத்துக்கொள் . . .
ராமானுஜா . . .
என் நாமஜபத்தை எடுத்துக்கொள் . . .
ராமானுஜா . . .
என் வம்சத்தை எடுத்துக்கொள் . . .
ராமானுஜா . . .
ஏதாவது செய் . . .
மத மாற்றத்தை அழித்துப்போடு . . .
மதம் மாறினவர்களை சரி செய் . . .
ராமானுஜா . . .
உன் இந்து தர்மத்தைக் காப்பாற்று . . .
நான் இந்துஸ்தானத்தை
சீக்கிரம் பார்க்க தவிக்கிறேன் . . .
அதைப் பார்த்தவுடன்
என் மூச்சு நின்று போகட்டும் . . .
என் குரல் கேட்கிறதா . . .
என் அழுகை புரிகிறதா . . .
என் வலி தெரிகிறதா . . .
ராமானுஜா . . .
வா. . .வா. . . வா. . .
உன் இந்துதர்மத்தை
அசிங்கப்படுத்துகிறார்கள் . . .
இனியும் பொறுக்கமுடியாது ! ! !
உத்தரவிடு . . .
உண்மையை உலகிற்கு புரியவை . . .
இந்துவை வாழவை . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக