உன் நினைவே சுகமடா . . .
ராதேக்ருஷ்ணா
ஹே வேங்கட க்ருஷ்ணா . . .
நீ ரொம்ப அழகுடா ! ! !
உன் மீசை ரொம்ப ரொம்ப
அழகுடா . . .
உன் திருமுகம் அற்புத
அழகுடா . . .
உன் திருப்பவள செவ்வாய்
ஒய்யார அழகுடா . . .
உன் திருமார்பு என்னை
வசீகரிக்கும் அழகுடா . . .
நீ நிற்கும் அழகு
என்னை மயக்குதடா . . .
உன் கருணை
என்னை அழ வைக்குதடா . . .
உன் அன்பு
என்னை உருக்குதடா . . .
உன்னிடம் நான்
என்னை தந்துவிட்டேனடா . . .
இனி நான் உன்
குற்றேவலடா . . .
என்னை மறந்துவிடாதேடா . . .
என் கண்ணா . . .
என் சாரதி . . .
என் செல்லமே . . .
உன் நினைவே சுகமடா . . .
வேறு என்ன வேண்டுமடா . . .
வாழ்வில் நீ ஒருவன் போதுமடா . . .
வேறு யாருமே வேண்டாமடா . . .
வாழ்வே போதுமடா . . .
உன் நினைவிலேயே வாழ்வேனடா !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக