ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

காமம் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
காமம் . . .
 
உடலின் தேவையா ?
உடலின் தேவைதான் . . .
 
 
மனதின் ஆசையா ?
மனதின் தாக்கம் அதிகம் . . .
 
 
இயற்கையின் உந்துதலா ?
நிச்சயமாக இயற்கையானதுதான் . . .
 
 
உண்மையில் அவசியமா ?
 மனிதரைப் பொறுத்து,மனதைப் பொறுத்து
மாறுபடும் . . .

 
இல்லாமல் வாழமுடியுமா ?
நிச்சயமாக முடியும் . . .
முதலாழ்வார்கள்,எம்பார் கோவிந்தர்,விவேகானந்தர்,ரமணர்,
போன்ற பலர் வாழ்ந்துள்ளனர் . . .
இன்றும் பலர் உண்டு . . .

 
 
அனுபவித்தால் குற்றமா ?
தர்மத்திற்கு விரோதமில்லாத
காமம் நான் என்று கண்ணனே கூறுகிறான் . . .
தர்மத்திற்கு விரோதமான காமம் குற்றமே !
 
 
தெய்வம் சம்மந்தப்பட்டதா ?
தெய்வத்தின் சக்தியினால் தானே
காமத்தினால் இரு உடல் கூடி
ஒரு உடல் உற்பத்தியாகிறது !
 
 
இரசாயன மாற்றமா ?
 உடலில் ஒரு குறிப்பிட்ட
வயதில் உண்டாகும்
இரசாயன மாற்றமே காமம் !
 
இளமையின் தேடலா ?
இளமையின் பலத்தில்
மிக முக்கிய தேடலாக உள்ளது !
 
 
எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானதா ?
சகல ஜீவராசிகளுக்கும் பொதுவானதே !
 
 
காமம் கேவலமானதா ?
ஒரு எல்லையைத் தாண்டினால்
நிச்சயம் கேவலமானதே . . .
 
 
காமம் தவமா ?
தெய்வ தியானத்துடன் கூடின
காமம் நிச்சயம் தவமே . . .
ஜயதேவர் பத்மாவதி தம்பதியரின்
காமம் தெய்வீகமானதே . . .
 
 
காமம் பலமா ?
பகவானின் நாமத்துடன் கூடிய
தர்ம சம்மதமான காமம் பலம் தரும் !
 
 
காமம் பலவீனமா ?
உடலை அனுபவிப்பதையே
முக்கியமாகக் கொண்ட காமம்
நிச்சயம் பலவீனமானதே !
விஸ்வாமித்திரரின் காமம்
அவரை பலவீனமாக்கியது !
 
 
காமத்தினால் தெய்வம் கிட்டுமா ?
எத்தனையோ மஹாத்மாக்களைப்
பெற்றவர்கள் உடல் கூடிதானே
அவர்களைப் பெற்றனர் . . .
 
 
உன் காமத்தை இப்போது நீ ஆராய்ச்சி செய் !
 
 
காமம் மிகவும் நுணுக்கமானது !
உள்ளபடி புரிந்தவர் வெகு சிலரே !
 
காமத்தினால் வீணானவர் பலர் !
காமத்தை ஜெயித்தவர் சிலர் !
காமத்தை அடக்கினவர் வெகு சிலர் !
 
 
காமத்தை உபயோகப்படுத்தினவர்
மிகச் சிலர் . . .
 
 
இப்போது உன் மனதை கவனி !
 அதன் தாபத்தைக் கவனி !
அதன் கேள்விகளைக் கவனி !
 
பதிலைத் தேடு . . .
 
 
உன் காமம் உன்னை
க்ருஷ்ணனிடம் கொண்டு சென்றால்
அது மிகவும் உயர்ந்தது . . .
 
 
உன் காமம் உன்னை
நரகத்திற்கு அழைத்துச் சென்றால்
அது மிகவும் ஆபத்தானது . . .


என் காமம் கண்ணனுக்காம் . . .

கோபிகள் தங்கள் காமத்தை
கண்ணனுக்குத் தந்து
ப்ரேமையாக மாற்றிக்கொண்டார்கள் !

நீ ? ! ?

 
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP