மன்னிப்புக் கோருகிறேன் . . .
ராதேக்ருஷ்ணா
க்ருஷ்ணா . . .
உன்னிடம் ஒரு வேண்டுகோள் !
நான் தெரிந்து பலரின்
மனதைப் புண்படுத்தி இருக்கிறேன் !
அவர்கள் மனதிற்கு
சமாதானம் தா . . .
நான் தெரியாமல் பலரின்
நெஞ்சை காயப்படுத்தி இருக்கிறேன் !
அவர்கள் நெஞ்சத்திற்கு
ஆறுதல் தா . . .
நான் என் உடலால்
சிலருக்குக் கஷ்டம் கொடுத்திருக்கிறேன் !
அவர்கள் உடலுக்கு
இதம் தா . . .
நான் என் மனதால்
சிலருக்குக் கஷ்டம்
நினைத்திருக்கிறேன் !
அவர்களுக்கு நிம்மதி தா . . .
க்ருஷ்ணா . . .
என்னால் கஷ்டம் அடைந்த
அனைத்து ஜீவர்களிடம்
நான் என் மனதார
மன்னிப்புக் கோருகிறேன் . . .
உனக்குத் தெரியும் !
என்னால் துன்பம்
அனுபவித்தவர்கள் அனைவரையும் !
இனி என்னால் ஒரு
ஜீவனுக்கும்
ஒரு துன்பம் நேரக்கூடாது !
தயவு செய்து
நான் யாருக்கும் கஷ்டம்
தராமல் இருக்கும்படியாக
இருக்க நீ ஆசிர்வாதம் செய் !
க்ருஷ்ணா . . .
மன்னித்து விடு . . .
உன் குழந்தைக்கு
உன்னிடம் மன்னிப்புக்
கேட்பதைத் தவிர
இந்த வாழ்வில் வேறு
எதுவும் உருப்படியாகச்
செய்யத்தெரியாது ! ! !
சிலருக்குக் கஷ்டம்
நினைத்திருக்கிறேன் !
அவர்களுக்கு நிம்மதி தா . . .
க்ருஷ்ணா . . .
என்னால் கஷ்டம் அடைந்த
அனைத்து ஜீவர்களிடம்
நான் என் மனதார
மன்னிப்புக் கோருகிறேன் . . .
உனக்குத் தெரியும் !
என்னால் துன்பம்
அனுபவித்தவர்கள் அனைவரையும் !
இனி என்னால் ஒரு
ஜீவனுக்கும்
ஒரு துன்பம் நேரக்கூடாது !
தயவு செய்து
நான் யாருக்கும் கஷ்டம்
தராமல் இருக்கும்படியாக
இருக்க நீ ஆசிர்வாதம் செய் !
க்ருஷ்ணா . . .
மன்னித்து விடு . . .
உன் குழந்தைக்கு
உன்னிடம் மன்னிப்புக்
கேட்பதைத் தவிர
இந்த வாழ்வில் வேறு
எதுவும் உருப்படியாகச்
செய்யத்தெரியாது ! ! !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக