மறப்பாய் . . . மன்னிப்பாய் . . .
ராதேக்ருஷ்ணா
மறப்பாய் . . . மன்னிப்பாய் . . .
எல்லோரும் தவறு செய்பவர்களே !
தவறு செய்யாமல் யாருமில்லை !
நீயும் எத்தனையோ தவறுகள்
செய்திருக்கிறாய் . . .
செய்துகொண்டிருக்கிறாய் . . .
செய்யப்போகிறாய் . . .
க்ருஷ்ணன் உனது
எத்தனையோ தவறுகளை
மன்னித்திருக்கிறான் . . .
மன்னித்துக்கொண்டிருக்கிறான் . . .
மன்னிக்கப்போகிறான் . . .
அதுபோல் நீயும்
அடுத்தவரின் குற்றங்களை
மன்னிப்பாய் . . .மறப்பாய் . . .
குற்றங்கள் இல்லையென்றால்
கருணைக்கு பலமேது . . .
குற்றங்கள் இல்லையென்றால்
மன்னிப்பிற்கு மதிப்பேது . . .
நீ யாரையும் குற்றவாளியாக
ஒருபோதும் நினைக்காதே . . .
உன்னை உலகம்
குற்றவாளியாகப் பார்த்தாலும்
நீ உலகையே நேசி . . . .
க்ருஷ்ணன் குற்றங்களைப்
பார்ப்பதில்லை . . .
குணங்களைப் பார்க்கிறான் . . .
அதனாலேயே எல்லோரையும்
எப்போதும் நேசிக்கிறான் . . .
நீயும் நேசி . . .
எல்லோரையும் நேசி . . .
எப்போதும் நேசி . . .
நேசித்துப் பார் . . .
உலகமே உனக்கு வசப்படும் . . .
குற்றங்களை மறந்து மனிதரைப் பார் !
எல்லோரும் தெய்வமாகத் தெரிவர் . . .
குற்றத்தை மட்டும் பார் . . .
தெய்வம் கூட குற்றவாளியாய் தெரியும் !
மாறு . . .
மனதை மாற்று . . .
வாழ்வை மாற்று . . .
உலகை மாற்று . . .
இன்றே . . .இங்கே . . . இப்பொழுதே ! ! !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக