ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 பிப்ரவரி, 2012

கலங்காமல் நிதானமாயிரு . . .

ராதேக்ருஷ்ணா
மாற்றமே இல்லாதது
மாற்றம் . . .
மாற்றவே முடியாதது
மாற்றம் . . .
தவிர்க்க முடியாதது
மாற்றம் . . .
உலகில் நிரந்தரமானது
மாற்றம் . . .

காலத்தினால் மாறாதது
மாற்றம் . . .


பணத்தினால் மாற்றமுடியாதது
மாற்றம் . . .


புத்தியினால் தவிர்க்கமுடியாதது
மாற்றம் . . .


மாற்றம் என்ற ஒன்றுதான்
உலகில் தினமும்
நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது !


அதனால் நீ தைரியமாக இரு !


உன் வாழ்விலும்
ஒரு நல்ல மாற்றம்
நடந்துகொண்டிருக்கிறது !


நிச்சயம் நீ எதிர்பார்க்கும்
நல்லமாற்றம்
ஒரு நாள் வரும் !


தேவையில்லாத கெட்டவைகள்
நல்லவைகளாக மாறும்
காலம் தூரத்திலில்லை !


அதனால் நீ உன் மனதை
நல்வழியில் மாற்றிவிடு . . .


மற்றவை மாறும் . . .


கலங்காமல் நிதானமாயிரு . . .




0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP