விட்டுக்கொடு . . .
ராதேக்ருஷ்ணா
விட்டுக்கொடு . . .
விட்டுக்கொடுத்தவர்கள்
கெட்டுப்போனதில்லை . . .
சில இடங்களில்
விட்டுக்கொடுக்கலாம் . . .
சில பேரிடம்
விட்டுக்கொடுக்கலாம் . . .
சில விஷயங்களில்
விட்டுக்கொடுக்கலாம் . . .
சில சந்தர்ப்பங்களில்
விட்டுக்கொடுக்கலாம் . . .
சில காரியங்களில்
விட்டுக்கொடுக்கலாம் . . .
விட்டுக்கொடுப்பதால்
நீ வாழ்வில் உயர்ந்துகொண்டேயிருக்கிறாய் !
விட்டுக்கொடுப்பதால்
நீ பெருமை அடைகிறாய் !
விட்டுக்கொடுப்பதால்
நீ பலம் பெறுகிறாய் !
விட்டுக்கொடுப்பதால்
நீ ஆசிர்வாதம் பெறுகிறாய் !
விட்டுக்கொடுப்பதால்
நீ பக்குவப்படுகிறாய் !
விட்டுக்கொடுப்பதால்
நீ அடுத்தவரை கடனாளியாக்குகிறாய் !
விட்டுக்கொடுப்பதால்
நீ அதிகம் பெறுகிறாய் !
விட்டுக்கொடுப்பதால்
நீ இன்பம் அடைகிறாய் !
கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் பார் !
உன் அன்பு எல்லைகளைக் கடக்கும் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக