இதில் என்ன தப்பு . . .
ராதேக்ருஷ்ணா
முயற்சிக்காதே . . .
ஒரு நாளும் முயற்சிக்காதே . . .
நீ சிறந்த பக்தன்/பக்தை
என்று உலகில் நிரூபிக்க
ஒரு நாளும் முயற்சிக்காதே . . .
பக்தி என்பது உனது
தனிப்பட்ட விஷயம் . . .
அதில் அடுத்தவருக்கு
ஒரு சம்மந்தமும் இல்லை . . .
கடவுளை நம்புவதும்,
நம்பாதிருப்பதும் அவரவர்
மனது,காலம்,வாழ்க்கையைப்
பொறுத்து அமைகிறது . . .
முதலில் நம்பாதவர்
பிறகு நம்புவதும் உண்டு ! ! !
முதலில் நம்பினவர்
பிறகு சந்தேகிப்பதும் உண்டு ! ! !
பக்தி என்பது குழந்தையின்
இனம் புரியாத சந்தோஷம் போன்றது !
ஒரு குழந்தையின் சந்தோஷத்தை
யாராலும் உள்ளபடி சொல்லவேமுடியாது !
ஒரு குழந்தையின் சந்தோஷத்தின்
காரணத்தை கண்டுபிடிப்பதும் கஷ்டம் !
குழந்தை தன் மனதைக் கொண்டு
தன் சந்தோஷத்தை அனுபவிக்கிறது !
அதுபோலே பக்தன்/பக்தை
தன் மனதினால் சந்தோஷத்தை
அனுபவிக்கிறார் . . .
இதில் என்ன தப்பு . . .
பக்தியைப் பற்றி
தெரியாதவர்களுக்கு இதில் என்ன கவலை ?
நாஸ்தீகர்களுக்கு
இதில் ஏன் பொறாமை ?
விஞ்ஞானி தன் ஆராய்ச்சியில்
சந்தோஷம் காண்கிறான் . . .
சம்சாரி தன் குடும்பத்தில்
சந்தோஷம் காண்கிறான் . . .
குடிகாரன் போதையில்
சந்தோஷம் காண்கிறான் . . .
குழந்தை பொம்மையில்
சந்தோஷம் காண்கிறது . . .
இளவயது உடலுறவில்
சந்தோஷம் காண்கிறது . . .
முதியவயது அக்கறையில்
சந்தோஷம் காண்கிறது . . .
திருடன் திருட்டில்
சந்தோஷம் காண்கிறான் . . .
இப்படி ஒவ்வொருவரும்
ஏதோ ஒன்றில் சந்தோஷம்
அடைகிறார்கள் . . .
அது போலே பக்தரும் பக்தியில் . . .
இதில் என்ன குற்றம் . . .
இதில் என்ன பைத்தியக்காரத்தனம் . . .
இதில் என்ன மூடத்தனம் . . .
நீ உன் பக்தியை அனுபவி . . .
மற்றவற்றை ஒதுக்கித் தள்ளு . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக