ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Thursday, February 23, 2012

யோசிக்காதே . . .


ராதேக்ருஷ்ணா


யோசிக்காதே . . .


நிறைய யோசித்துவிட்டாய் !


யோசித்து யோசித்து
உன் மூளை களைத்ததுதான் மிச்சம் !


 கொஞ்சம் உன் யோசனைகளை
மூட்டைகட்டி ஓரமாக வை !


கெட்டதை யோசிப்பதை விடு !


நல்லதை யோசிப்பதையும் விடு !


 துன்பங்களை யோசிப்பதை விடு !


இன்பங்களை யோசிப்பதை விடு !


நஷ்டங்களை யோசிப்பதை விடு !


லாபங்களை யோசிப்பதை விடு !


சண்டைகளை யோசிப்பதை விடு !


சமாதானத்தை யோசிப்பதை விடு !


கடந்தகாலத்தைப் பற்றி யோசிப்பதை விடு !


எதிர்காலத்தைப்பற்றி யோசிப்பதை விடு !


குடும்பத்தைப்பற்றி யோசிப்பதை விடு !


பந்தங்களின் யோசனையை விடு !


பாவங்களின் யோசனையை விடு !


புண்ணிய யோசனைகளை விடு !


வீட்டு யோசனைகளை விடு !


நாட்டு யோசனைகளை விடு !


வியாதியைப் பற்றி யோசிப்பதை விடு !


ஆரோக்கிய யோசனைகளை விடு !


பணத்தைப் பற்றிய யோசனையை விடு !


சொத்து யோசனையை விடு !


பட்ட கஷ்டங்களின் யோசனையை விடு !


அடைந்த அவமானங்களின்
யோசனையை விடு !


எல்லோரைப் பற்றிய
யோசனைகளை விடு !


சாப்பாட்டு யோசனையை விடு !


 மரணத்தைப் பற்றிய யோசனையை விடு !


இப்படி எல்லா யோசனைகளையும்
தள்ளிக்கொண்டே வா . . .

எல்லா யோசனைகளையும்
விட்டுக்கொண்டே வா . . .

உன் மனம் நிம்மதியடையும் . . .

நான் சொல்வது உனக்கு
புதியதாக இருக்கும் . . .

தினமும் இரவு நீ
எல்லா யோசனைகளையும்
விடுவதாலேயே நிம்மதியாக தூங்குகிறாய் !


அதுபோலே
விழித்திருக்கும்போதும்
யோசனை இல்லாமல் வாழ்ந்து பார் . . .


பிறகு புரியும் . . .

யோசிக்காமல் இருப்பது
எத்தனை சுகம் என்பது !


யோசிக்காமல் இரு . . .

உன் பலம் உனக்குப் புரியும் . . .

க்ருஷ்ண க்ருபை உனக்குப் புரியும் . . .

வாழ்க்கை உனக்குப் புரியும் . . .

ஆனந்தம் உனக்குப் புரியும் . . .

 எனக்குப் பிறகு சொல் . . .

எனக்குச் சொல்லவேண்டும்
என்று யோசிப்பதையும் விடு . . .

மனம் லேசாகும் . . .

 

0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP