நட்பு . . .
ராதேக்ருஷ்ணா
நட்பு அழகானது . . .
நட்பு ஆழமானது . . .
நட்பு அவசியமானது . . .
நட்பு அற்புதமானது . . .
நட்பு உயர்வானது . . .
நட்பு விலைமதிப்பற்றது . . .
நட்பு நிரந்தரமானது . . .
நட்பு பவித்திரமானது . . .
நட்பு அன்புமயமானது . . .
இன்றைய உலகில்
மிகவும் உயர்வாகப் பேசப்படுவது
நட்பே . . .
எத்தனை விதமான
வாக்கியங்கள், கவிதைகள்
நட்பைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது . . .
தங்களைப் போல் நல்ல நண்பர்கள்
உலகில் எவருமில்லை என்பது
பலபேருடைய அபிப்ராயம் . . .
நம்முடைய இதிஹாச, புராணங்களில்
அற்புதமான பல நண்பர்களும்,
பல தோழிகளும் உண்டு . . .
பக்த வைபவங்களிலும்
ஆச்சரியமான பல் நட்பு உண்டு . . .
ஆப்த நண்பர்களை
தரிசிப்போம் வா . . .
உயிரினும் மேலான
நட்பை ரசிப்போம் வா . . .
வேடுவன் குகனை,
பகவான் ஸ்ரீ ராமன் தன்னுடைய
உயிர் தோழன் என்று
கட்டி அணைத்துக்கொண்டான் . . .
பகவான் ஸ்ரீ ராமனுக்கு,
வேடுவன் குகன் தன்னுடைய
ஸ்ருங்கிபேரபுரத்தையயே
அவனுடையது என்று சொன்னான் . . .
வானரமான சுக்ரீவனை,
தன்னுடைய நண்பனாக,
அக்னி சாட்சியாக பகவான் ஸ்ரீ ராமன்
ஏற்றுக்கொண்டான் . . .
வானரராஜன் சுக்ரீவன்,
சீதா பிராட்டியைக் கண்டுபிடிக்கவும்,
அவளை மீண்டும் அடையவும்,
பகவான் ஸ்ரீ ராமனுக்கு
சகாயம் செய்தான் . . .
க்ருஷ்ணனோ கோபகுழந்தைகள்
அனைவரிடமும் சமமாக
அமர்ந்து, வனபோஜனம் செய்தான் . . .
ப்ரும்மதேவரும் கோபகுழந்தைகள்
போலே உலகில் யாரும் பாக்கியவான்கள்
கிடையாது என்று ஸ்தோத்திரம் செய்தார் . . .
அர்ஜுனன் தன்னுடைய உயர்ந்த நட்பால்
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனையே,
கருப்பன்,இடையன் என்று
பரிகாசம் செய்தான் . . .
அர்ஜுனனின் அற்புதமான நட்பிற்க்காக,
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன் தன்னுடைய
வைகுண்ட லோகத்திற்க்கே
அவனை அழைத்துச் சென்றான் . . .
உத்தவரின் உயர்ந்த நட்பிற்க்கு
வசப்பட்ட பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன்,
கோபிகைகளிடம் அவரையே
தூது அனுப்பினான் . . .
க்ருஷ்ணனின் நட்பில் வசப்பட்ட
உத்தவரும் க்ருஷ்ண அவதாரத்தின்
முடிவில் பகவானையே பின்
தொடர்ந்து உபதேசம் பெற்றார் . . .
பால்ய சினேகிதனான ஸ்ரீ க்ருஷ்ணனைக்
காண, ஏழைக் குசேலரும்,
அவலைக் கந்தையில் முடிந்துகொண்டு,
த்வாரகைக்குச் சென்றார் . . .
குசேலரின் ஒரு பிடி அவலுக்கு,
மயங்கிய ஸ்ரீ க்ருஷ்ணன், பழங்கதைகள்
பேசி,அவருக்கு மரியாதை செய்து,
நீங்காத செல்வத்தைத் தந்தான் . . .
கோபிகைகளை விட்டு தான் மட்டும்
க்ருஷ்ணனை அனுபவிக்க மனமில்லாத
ப்ரேம ஸ்வரூபினி ராதிகா ராணி,
ஸ்ரீ க்ருஷ்ணனையே பிரிந்தாள் . . .
ராதிகா க்ருஷ்ணனின் ப்ரேம சங்கமத்திற்க்கு,
ராதிகாவின் தோழிகள் அஷ்ட சகிகளும்,
ப்ருந்தாவனத்தில்,சேவா குஞ்சத்தில்
தினமும் சேவை செய்கின்றார்கள் . . .
ஆண்டாளும் ஸ்ரீ க்ருஷ்ணனை,
தான் மட்டும் அடைய மனமில்லாமல்,
தன் அன்புத் தோழிகளையும்
கூட்டிக்கொண்டு திருப்பாவை
விரதமிருந்தாள் . . .
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபுவும்,
ஸ்ரீ பாத நித்யானந்தரும்,
தங்களுடைய உயர்ந்த நட்பால்,
உலகையே வசப்படுத்தினார்கள் . . .
சந்த் நாமதேவரும், ஸ்ரீ ஞானேஷ்வரரும்,
தங்களுடைய அற்புதமான நட்பால்,
விட்டலனையே வசப்படுத்தினார்கள் . . .
மஹாகவி காளிதாசனும்,
தன் நண்பன் போஜ ராஜனுக்கு,
தன் ஆயுளின் பாதியைத் தந்தான் . . .
கோவிந்த தாஸரும் தன் நட்பால்
பகவான் ஸ்ரீ நாத்ஜீயை வசப்படுத்தி,
அவனோடு கோலிகுண்டு விளையாடினார் . . .
பகவான் ஸ்ரீ நாத்ஜி, கோவிந்ததாஸரின்
நட்பை உலகில் ப்ரகடனப்படுத்த,
தான் அவரோடு ஆகாரம் சாப்பிட்டான் . . .
வேடுவன் குகனை,
பகவான் ஸ்ரீ ராமன் தன்னுடைய
உயிர் தோழன் என்று
கட்டி அணைத்துக்கொண்டான் . . .
பகவான் ஸ்ரீ ராமனுக்கு,
வேடுவன் குகன் தன்னுடைய
ஸ்ருங்கிபேரபுரத்தையயே
அவனுடையது என்று சொன்னான் . . .
வானரமான சுக்ரீவனை,
தன்னுடைய நண்பனாக,
அக்னி சாட்சியாக பகவான் ஸ்ரீ ராமன்
ஏற்றுக்கொண்டான் . . .
வானரராஜன் சுக்ரீவன்,
சீதா பிராட்டியைக் கண்டுபிடிக்கவும்,
அவளை மீண்டும் அடையவும்,
பகவான் ஸ்ரீ ராமனுக்கு
சகாயம் செய்தான் . . .
க்ருஷ்ணனோ கோபகுழந்தைகள்
அனைவரிடமும் சமமாக
அமர்ந்து, வனபோஜனம் செய்தான் . . .
ப்ரும்மதேவரும் கோபகுழந்தைகள்
போலே உலகில் யாரும் பாக்கியவான்கள்
கிடையாது என்று ஸ்தோத்திரம் செய்தார் . . .
அர்ஜுனன் தன்னுடைய உயர்ந்த நட்பால்
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனையே,
கருப்பன்,இடையன் என்று
பரிகாசம் செய்தான் . . .
அர்ஜுனனின் அற்புதமான நட்பிற்க்காக,
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன் தன்னுடைய
வைகுண்ட லோகத்திற்க்கே
அவனை அழைத்துச் சென்றான் . . .
உத்தவரின் உயர்ந்த நட்பிற்க்கு
வசப்பட்ட பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன்,
கோபிகைகளிடம் அவரையே
தூது அனுப்பினான் . . .
க்ருஷ்ணனின் நட்பில் வசப்பட்ட
உத்தவரும் க்ருஷ்ண அவதாரத்தின்
முடிவில் பகவானையே பின்
தொடர்ந்து உபதேசம் பெற்றார் . . .
பால்ய சினேகிதனான ஸ்ரீ க்ருஷ்ணனைக்
காண, ஏழைக் குசேலரும்,
அவலைக் கந்தையில் முடிந்துகொண்டு,
த்வாரகைக்குச் சென்றார் . . .
குசேலரின் ஒரு பிடி அவலுக்கு,
மயங்கிய ஸ்ரீ க்ருஷ்ணன், பழங்கதைகள்
பேசி,அவருக்கு மரியாதை செய்து,
நீங்காத செல்வத்தைத் தந்தான் . . .
கோபிகைகளை விட்டு தான் மட்டும்
க்ருஷ்ணனை அனுபவிக்க மனமில்லாத
ப்ரேம ஸ்வரூபினி ராதிகா ராணி,
ஸ்ரீ க்ருஷ்ணனையே பிரிந்தாள் . . .
ராதிகா க்ருஷ்ணனின் ப்ரேம சங்கமத்திற்க்கு,
ராதிகாவின் தோழிகள் அஷ்ட சகிகளும்,
ப்ருந்தாவனத்தில்,சேவா குஞ்சத்தில்
தினமும் சேவை செய்கின்றார்கள் . . .
ஆண்டாளும் ஸ்ரீ க்ருஷ்ணனை,
தான் மட்டும் அடைய மனமில்லாமல்,
தன் அன்புத் தோழிகளையும்
கூட்டிக்கொண்டு திருப்பாவை
விரதமிருந்தாள் . . .
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபுவும்,
ஸ்ரீ பாத நித்யானந்தரும்,
தங்களுடைய உயர்ந்த நட்பால்,
உலகையே வசப்படுத்தினார்கள் . . .
சந்த் நாமதேவரும், ஸ்ரீ ஞானேஷ்வரரும்,
தங்களுடைய அற்புதமான நட்பால்,
விட்டலனையே வசப்படுத்தினார்கள் . . .
மஹாகவி காளிதாசனும்,
தன் நண்பன் போஜ ராஜனுக்கு,
தன் ஆயுளின் பாதியைத் தந்தான் . . .
கோவிந்த தாஸரும் தன் நட்பால்
பகவான் ஸ்ரீ நாத்ஜீயை வசப்படுத்தி,
அவனோடு கோலிகுண்டு விளையாடினார் . . .
பகவான் ஸ்ரீ நாத்ஜி, கோவிந்ததாஸரின்
நட்பை உலகில் ப்ரகடனப்படுத்த,
தான் அவரோடு ஆகாரம் சாப்பிட்டான் . . .
இன்னும் நிறைய உண்டு . . .
தேடிப்பார் . . .
நட்பின் ஆழம் புரியும் . . .
எனக்கும் உன்னத நண்பர்கள் உண்டு . . .
எனக்கு நட்பு மிகவும் பிடிக்கும் . . .
என் நண்பர்கள் யார் தெரியுமா . . .?
உனக்கு ஏன் சொல்லவேண்டும் ?
சொல்லத்தான் வேண்டும் . . .
ஏனென்றால் நீயும் எனக்கு தோழன் . . .
நான் பெண் பாவத்திலிருந்தால்
நீயும் எனக்கு தோழி . . .
எப்படி நீயும் நானும் தோழர்கள் . . ?
என் மனதின் ரஹஸ்யங்களை
நீ தெரிந்துகொள்கிறாயே . . .
இன்றுவரை நான் உன்னுடன்
பகிர்ந்துகொள்கிறேனே . . .
ஆமாம்.,...
ஆனந்தவேதம் என் மனதுதானே . . .
அதை நீ உன் மனதில்
நீ
பத்திரமாக வைத்திருக்கிறாயே . . .
ஞாபகம் வைத்திருக்கிறாயே . . .
அதுதான் நட்பு . . .
நட்பு வளரட்டும் . . .
என் உயிர் தோழா . . .
என் உயிர் தோழி . . .
இன்று தோழர்கள் தினமாம்....
உலகம் கொண்டாடுகிறது . . .
நாமும் கொண்டாடுவோம் . . .
நட்பே நீ வாழ்க . . .
நட்பே நீ வளர்க . . .
நட்பே உனக்கு வந்தனம் . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக