நான் பரிசுத்தமானேன் . . .
ராதேக்ருஷ்ணா
ஸ்ரீ ரங்கா . . .
ஸ்ரீ ரங்கநாதா . . .
ஸ்ரீ ரங்கராஜா . . .
பெரிய பெருமாளே . . .
நம் பெருமாளே . . .
ஆபரணத்திற்கு அழகு
சேர்க்கும் பெருமாளே . . .
பதின்மர் பாடிய அழகா . . .
பூலோக வைகுண்டமான
ஸ்ரீ ரங்கம் வாழ்க . . .
என் அரங்கத்து இன்னமுதர்
ஸ்ரீ ரங்கநாதன் வாழ்க . . .
படிதாண்டா பத்தினி,புருஷ கார பூதை
ஸ்ரீ ரங்கநாயகி வாழ்க . . .
தானான திருமேனி,உடையவர்,
ஸ்ரீ யதிராஜன் வாழ்க . . .
பெரிய பெருமாளின்,பெரிய திருவடி
ஸ்ரீ கருடாழ்வார் வாழ்க . . .
கம்பனின் ராமாயணத்தை ஏற்ற
ஸ்ரீ மேட்டழகிய சிங்கர் வாழ்க . . .
பக்தர்களை வசீகரிக்கும்
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வாழ்க . . .
ஜனங்களின் வியாதிகளைத் தீர்க்கும்
ஸ்ரீ தன்வந்திரி வாழ்க . . .
அமைதியாய் அனுக்ரஹிக்கும்
அம்ருத கலச கருடன் வாழ்க . . .
விஸ்வரூப தரிசனத்திற்கு,
ஸ்ரீ ரங்கராஜன் தரிசிக்கும் கோமாதா வாழ்க . . .
காலையில் ஸ்ரீ ரங்கராஜனை எழுப்ப
வீணைவாசிப்பவர் வாழ்க . . .
ஸ்ரீ ரங்கராஜன் என்னும் யானையின்
செல்ல யானை வாழ்க . . .
ஸ்ரீ ரங்க விமானத்தில் வாசம் செய்யும்
பரவாசுதேவர் வாழ்க . . .
தினமும் ஸ்ரீ ரங்கராஜனுக்கு பூஜைகள்
செய்யும் பட்டர்கள் வாழ்க . . .
ஸ்ரீ ரங்கராஜனின் கோயிலின்
கைங்கர்ய பரர்கள் வாழ்க . . .
ஸ்ரீ ரங்கராஜனின் திருக்கோயிலின்
வாயில் காப்போர்கள் வாழ்க . . .
ஸ்ரீ ரங்கராஜனின் திருமாளிகையை
சுத்தம்செய்யும் பாக்கியவதிகள் வாழ்க . . .
ஸ்ரீ ரங்கராஜனே கதி என்றிருக்கும்
பக்தகோடிகள் வாழ்க . . .
ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளோடு
விளையாடும் காவிரித்தாய் வாழ்க . . .
ஸ்ரீ ரங்கராஜனுக்காக அழுத
ஸ்வாமி நம்மாழ்வார் வாழ்க . . .
ஸ்ரீ ரங்கராஜனுக்கு மாமனரான
ஸ்ரீ பெரியாழ்வார் வாழ்க . . .
ஸ்ரீ ரங்கராஜனோடு ஐக்கியமான
திருப்பாணாழ்வார் வாழ்க . . .
ஸ்ரீ ரங்கராஜனுக்கு மதில் கைங்கர்யம்
செய்த திருமங்கையாழ்வார் வாழ்க . . .
ஸ்ரீ ரங்கராஜனே என் தெய்வம் என்ற
தொண்டரடிப்பொடி ஆழ்வார் வாழ்க . . .
ஸ்ரீ ரங்கராஜனுக்காக ராஜ்ஜியத்தையும் துறந்த
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் வாழ்க . . .
ஸ்ரீ ரங்கராஜனிடத்தில் மனதைக் கொடுத்த
முதலாழ்வார்கள் மூவரும் வாழ்க . . .
இவளை நான் கரம் பிடிக்கப் போகிறேன்
என்று ஸ்ரீ ரங்கராஜனையே சொல்ல வைத்த
எங்கள் ராஜாத்தி ஆண்டாள் வாழ்க . . .
ஸ்ரீ ரங்கராஜனை முகம்மதிய வழக்கப்படி
லுங்கி (சாரம்) அணிய வைக்கும்
அழகு துலுக்க நாச்சியார் வாழ்க . . .
ஸ்ரீ ரங்கராஜனை தன் கணவனாக
வரித்த குலசேகரவல்லி வாழ்க . . .
ஸ்ரீ ரங்கராஜனுக்குப் புஷ்பங்கள் தரும்
திருநந்தவனம் வாழ்க . . .
ஸ்ரீரங்கராஜனின் செல்லக் குளியல் தொட்டி
சந்திர புஷ்கரினி வாழ்க . . .
ஸ்ரீ ரங்கராஜனின் கோயிலில் வசிக்கும்
குரங்கினமும்,புறாக்களும்,கிளிகளும்,
குயில்களும்,பூனைகளும்,
மற்ற ஜந்துக்களும் வாழ்க . . .
ஸ்ரீ ரங்கராஜனின் ஸ்ரீ ரங்க வீதிகளில்
வசிக்கும் பாக்கியவான்கள் வாழ்க . . .
ஸ்ரீ ரங்கம் வாழ்க . . .
என் மணிவண்ணன் ஸ்ரீ ரங்கன் வாழ்க . . .
பல்லாயிரம், பல்லாயிரம்,
பலகோடி நூறாயிரம் ஆண்டுகள்
வாழ்க . . . வாழ்க . . , வாழ்க . . .
ஸ்ரீ ரங்க ஐஸ்வர்யத்திற்கு
திருக்காப்பு . . .
ஸ்ரீ ரங்கராஜனுக்கு திருக்காப்பு . . .
ஸ்ரீ ரங்கநாயகிக்கு திருக்காப்பு . . .
ஸ்ரீ யதிராஜனுக்கு திருக்காப்பு . . .
ஹே ரங்கா . . .ஸ்ரீ ரங்கா . . . ரங்க ரங்கா . . .
ஆனந்தம் . . .பரமானந்தம் . . .ப்ரும்மானந்தம் . . .
போதும் . . .
இனி வேறென்ன வேண்டும் . . .
ஆஹா . . . என் ஆணவம் அழிந்தது . . .
என் கௌரவம் ஒழிந்தது . . .
என் சுயநலம் ஓடி ஒளிந்தது . . .
நான் பரிசுத்தமானேன் . . .
இனி ஒரு குறையில்லை . . .
மணிவண்ணா . . .
ரங்கா . . . நீ வாழ்க . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக