ஏற்றுக்கொள் !
ராதேக்ருஷ்ணா
ஏற்றுக்கொள் !
உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள் !
யதார்த்தத்தை அப்படியே ஏற்றுக்கொள் !
வருவதை அப்படியே ஏற்றுக்கொள் !
நிகழ்வுகளை அப்படியே ஏற்றுக்கொள் !
ஏற்றுக்கொண்டால் உனக்கே
வாழ்க்கை உள்ளபடி தெரியும் . . .
வெயில் காலத்தில்
வெப்பத்தை ஏற்றுக்கொள் !
மழைக் காலத்தில்
மழையை ஏற்றுக்கொள் !
குளிர்காலத்தில்
குளிரை ஏற்றுக்கொள் !
உலகத்தில்
ஜனனத்தை ஏற்றுக்கொள் !
பிரியமானவர்களின் மரணத்தை
ஏற்றுக்கொள் !
ஒவ்வொரு விடியலையும்
அப்படியே ஏற்றுக்கொள் !
உலகத்தின் நிகழ்வுகளை
ஏற்றுக்கொள் !
எதிர்பாராத செலவு வந்தால்
ஏற்றுக்கொள் !
திடீரென விருந்தாளி வருகையை
ஏற்றுக்கொள் !
திடீர் திருப்பங்களை
ஏற்றுக்கொள் !
வியாதி வந்தால்
களைப்பை ஏற்றுக்கொள் !
உன் பொறுப்புகள்
எவ்வளவு கடினமானாலும்
ஏற்றுக்கொள் !
எல்லா சமயத்திலும்
நிதானத்தை ஏற்றுக்கொள் !
எதிர்பாராத தனிமை அமைந்தால்
ஏற்றுக்கொள் !
வாழ்க்கையின் எல்லா பாடங்களையும்
ஏற்றுக்கொள் !
ஒவ்வொரு இடத்தின்
தன்மையை ஏற்றுக்கொள் !
உலகத்தில்
ஜனனத்தை ஏற்றுக்கொள் !
பிரியமானவர்களின் மரணத்தை
ஏற்றுக்கொள் !
ஒவ்வொரு விடியலையும்
அப்படியே ஏற்றுக்கொள் !
உலகத்தின் நிகழ்வுகளை
ஏற்றுக்கொள் !
எதிர்பாராத செலவு வந்தால்
ஏற்றுக்கொள் !
திடீரென விருந்தாளி வருகையை
ஏற்றுக்கொள் !
திடீர் திருப்பங்களை
ஏற்றுக்கொள் !
வியாதி வந்தால்
களைப்பை ஏற்றுக்கொள் !
உன் பொறுப்புகள்
எவ்வளவு கடினமானாலும்
ஏற்றுக்கொள் !
எல்லா சமயத்திலும்
நிதானத்தை ஏற்றுக்கொள் !
எதிர்பாராத தனிமை அமைந்தால்
ஏற்றுக்கொள் !
வாழ்க்கையின் எல்லா பாடங்களையும்
ஏற்றுக்கொள் !
ஒவ்வொரு இடத்தின்
தன்மையை ஏற்றுக்கொள் !
நான் சொல்வது உனக்கு
எவ்வளவு தூரம் புரிகிறது ?
நான் உன்னை வருவதை
"விதி"
என்று சொல்லி சும்மா
உட்காரச்சொல்லவில்லை !
அதை ஒழுங்காக புரிந்துகொள் !
எது உலகின் யதார்த்தமோ,
எது வாழ்வில் தவிர்க்கமுடியாததோ,
அதை ஏற்றுக்கொள்ள தயாராகு
என்பதே பாடம் . . .
ஏனென்றால் வாழ்வில்
பல சந்தர்ப்பங்களில்
யதார்த்தத்தை மறந்துவிடுகிறோம் . . .
யதார்த்தத்திலிருந்து
தப்பிக்க முயற்சிக்காதே . . .
யதார்த்தத்திலிருந்து
வாழ்க்கையை கற்றுக்கொள் !
யதார்த்தத்தை நீ
ஏற்றுக்கொண்டால்
நீ உலகையே வெல்லலாம்....
இது ஒரு தடவை படித்தால் புரியாது....
இதைப்பற்றி நிறைய சொல்லலாம்...
ஆனால் நீ யோசனை செய்...
யோசித்தல் என்பது தவமாகும்....
அதனால் இதை யோசனை செய் ...
ஒவ்வொரு நிகழ்விலும் உன்
மனதைப் பார்...
அது உனக்கு நிறைய ரஹஸ்யங்கள்
சொல்லும்....
உனக்குள் இருக்கும் சக்தியை நம்பு ....
அதை ஏற்றுக்கொள் ....
அப்பொழுது நீயே சொல்வாய் . . .
"ஏற்றுக்கொள் ... என் மனமே .... ஏற்றுக்கொள் ...."
0 கருத்துகள்:
கருத்துரையிடுக