ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 ஆகஸ்ட், 2010

அழகிய ரஹஸ்யம் !



ராதேக்ருஷ்ணா

சரியாக நினை !

தவறான கண்ணோட்டமே 
குழப்பத்திற்குக் காரணம் !

புத்தி என்பது சரியாக நினைப்பதற்கே !

அவமானத்தில் ஒரு மரியாதை
இருக்கிறது !
  நீ ஏன் அவமானத்தைப் பார்க்கிறாய் ?
ஒளிந்திருக்கும் மரியாதையைப் பார் . . .

நஷ்டத்தில் ஒரு லாபம்
இருக்கிறது !
நீ ஏன் நஷ்டத்தைப் பார்க்கிறாய் ?
அது தரப்போகும் லாபத்தைப் பார் . . .

ப்ரச்சனையில் ஒரு தீர்வு
இருக்கிறது !
நீ ஏன் பிரச்சனையைப் பார்க்கிறாய் ?
அதற்க்குள் இருக்கும் தீர்வைப் பார். . .



மரணத்தில் ஒரு
ஜனனம் இருக்கிறது !
நீ ஏன் மரணத்தைப் பார்க்கிறாய் ?
அதன் முடிவில் ஜனனத்தைப் பார் . . .


குழப்பத்தில்
ஒரு தெளிவு இருக்கிறது !
நீ ஏன் குழப்பத்தைக் கொண்டாடுகிறாய் ?
தெளிவைத் தேடிக் கண்டுபிடி . . .


இருளில்
ஒரு வெளிச்சம் இருக்கிறது !
நீ ஏன் இருள் என்று பயப்படுகிறாய் ?
ஒரு வெளிச்சத்தை உண்டாக்கு . . .



வெயிலில்
ஒரு நிழல் இருக்கிறது !
நீ ஏன் வெயிலில் வாடுகிறாய் ?
நிழலைத் தேடி கண்டுபிடித்து அதில் நில் . . .

நீ பார்க்கும் முறையை மாற்றிப்பார் !
உன் வாழ்வே ப்ரகாசமாகும் !

உலகத்தில் எல்லாவற்றிலும்
ஒரு
அழகிய ரஹஸ்யம்
ஒளிந்துகொண்டிருக்கிறது . . .


அந்த அழகிய ரஹஸ்யத்தை
நீ
உணர்ந்துவிட்டால்
என்றும் ஆனந்தமே . . .


அந்த அழகிய ரஹஸ்யம்
"எது உன்னை பாடாய் படுத்துகிறதோ,
அதற்குள்ளேயே அதை
முறியடிக்கும் வித்தையும்
ஒளிந்திருக்கிறது"
என்பதே . . .
 இதுதான் க்ருஷ்ணனி்ன் லீலை . . .


இந்த லீலைதான் 
உன் வாழ்வின் வெற்றிப்படி . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP