பார்க்கப் போகிறேன் . . .
ராதேக்ருஷ்ணா
ஸ்ரீரங்கம் போகின்றேன் . . .
நீண்ட நாள் கனவு . . .
பார்த்து பல வருஷங்கள் ஆகிவிட்டது . . .
காரேய் கருணை இராமானுஜனைப்
பார்க்கப் போகிறேன் . . .
என் தாயார் ரங்கநாயகியைப்
பார்க்கப் போகிறேன் . . .
குழலகர்,வாயழகர்,கொப்பூழில்
எழு கமலப் பூவழகர்,
ராஜாதி ராஜன் ரங்கராஜனைப்
பார்க்கப் போகிறேன் . . .
ஸ்வாமி நம்மாழ்வார் அழுது அழுது
பார்க்கத் துடித்த
ஸ்ரீ ரங்கநாதனைப்
பார்க்கப் போகிறேன் . . .
ஸ்ரீ பெரியாழ்வார் அப்போதைக்கு
இப்போதே சொல்லிவைத்த
பெரிய பெருமாளைப்
பார்க்கப் போகிறேன் . . .
எங்கள் ஆண்டாளையும்
மயக்கிய புராண புருஷனான,
என் அரங்கத்து இன் அமுதரான
நம்பெருமாளைப்
பார்க்கப் போகிறேன் . . .
தொண்டரடிப் பொடி ஆழ்வாரை
தேவதேவியிடமிருந்து மீட்டு
தன் பக்கம் அழைத்துக்கொண்டு,
திருமாலை பாடவைத்த,
அரங்கமா நகருளானைப்
பார்க்கப் போகிறேன் . . .
திருமங்கையாழ்வாரை
மதில் கைங்கர்யம் செய்ய வைத்து,
மோக்ஷத்திற்கு தன் தெற்கு வீடான,
திருக்குறுங்குடிக்குப் போகச் சொன்ன,
சீக்கிரம் போகிறேன் . . .
நேரமாகிவிட்டது . . .
கீழே சிஷ்யர்கள் காத்திருக்கிறார்கள் . . .
மீண்டு வந்து சொல்கிறேன் . . .
சீக்கிரம் போகிறேன் . . .
நேரமாகிவிட்டது . . .
கீழே சிஷ்யர்கள் காத்திருக்கிறார்கள் . . .
மீண்டு வந்து சொல்கிறேன் . . .
இதோ வந்துவிட்டேன் . . .
ஸ்ரீரங்கத்திற்குள் வந்துவிட்டேன் . . .
என் யதிராஜன் ராமானுஜர்
அழைத்து வந்தார் . . .
திருமங்கையாழ்வாரை
மதில் கைங்கர்யம் செய்ய வைத்து,
மோக்ஷத்திற்கு தன் தெற்கு வீடான,
திருக்குறுங்குடிக்குப் போகச் சொன்ன,
அரங்கமா கோயில் கொண்ட
என் கரும்பினைக் காண
வந்துவிட்டேன் . . .
திருப்பாணாழ்வாரை,
லோக சார்ங்க முனிவரின் தோளில்
சுமக்கச் செய்து ஸ்ரீரங்கத்திற்க்குள்,
அழைத்து வந்த அமலனாதிபிரானை,
என் அமுதனைக் காண வந்துவிட்டேன் . . .
எவருடைய இராஜ்ஜியத்தில்,
தினமும் ஸ்ரீ ரங்க யாத்திரை என்று
பறை அறிவிக்கப்பட்டதோ,
அந்த குலசேகர ஆழ்வாரின்
கருமணியை,கோமளத்தைக் காண
ஸ்ரீ ரங்கம் வந்துவிட்டேன் . . .
கருஅரங்கத்துள் இருந்து,
திருவரங்கத்தைத் தொழுதேனோ
தெரியாது . . .
ஆனால் இன்று,இப்பொழுது,
பூலோக வைகுண்டமான,
ஸ்ரீரங்கத்தில் அடியேனும்
இருக்கின்றேன் . . .
ஆஹா !
நம்ப முடியவில்லை . . .
யதிராஜரின் தானான திருமேனியைப்
பார்க்கப் போகிறேன் . . .
காவேரியில் குள்ளக்குளிர
குடைந்து நீராடப் போகிறேன் . . .
ஹே ரங்கா . . .
பொழுது புலர்கின்றது . . .
மஹாத்மாக்கள் மண்டிக்கிடந்த
புண்ணிய பூமியில்,
இதோ இந்த எளியவனும்
இருக்கின்றேன் . . .
ரங்கா . . . ரங்கா . . . ரங்கா . . .
எங்கள் இந்து தர்மம் வளம் பெற வரம் தா . . .
எங்கள் பாரத தேசம் செழிக்க வரம் தா . . .
எங்கள் குழந்தைகள் பக்தி செய்ய வரம் தா . . .
ரங்கா . . . ரங்கா . . . ரங்கா . . .
ஸ்ரீரங்கா ...ஸ்ரீரங்கா ... ஸ்ரீரங்கா...
நீயும் வா . . .
அழகனைப் பார்க்கலாம் வா . . .
சயன அழகனைப் பார்க்கலாம் வா . . .
காரேய் கருணை இராமானுசனைப்
பார்க்கலாம் வா . . .
இந்த நாள் வாழ்வின் மிகச்சிறந்த நாள் . . .
என் அமங்களங்கள் இதோடு
முடிந்தது . . .
உனக்கும் இதுவே நல்ல நாள் . . .
இன்றைய காலை
மங்களகரமான காலை . . .
ரங்கா ! ரங்கா ! ரங்கா !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக