இன்று நீ பிறந்த திருவோணம் . . .
ராதேக்ருஷ்ணா
இன்று நீ பிறந்த திருவோணம் . . .
ஹே உத்தமா !
இன்று நீ பிறந்த திருவோணம் . . .
இந்த ஜீவர்களை
ஒட்டு மொத்தமாக,
பரிசுத்தப்படுத்த,
எத்தனை யுகங்கள்,
எத்தனை அவதாரங்கள் எடுத்தாய் . . .
எடுக்கின்றாய் . . .
எடுக்கப்போகிறாய் . . .
ஆயினும் ஹே குட்டைப் பயலே . . .
நீ மிகவும் பெரியவன் . . .
கச்யபருக்கும்,அதிதி தேவிக்கும்,
திருவோண நக்ஷத்திரத்தில்,
உலகை அளக்க அவதரித்த,
உத்தமனே நீ வாழி . . .
யாரையும் உருவத்தைக் கொண்டு
எடைப் போடக்கூடாது என்ற
பெரிய தத்துவத்தை நிரூபித்த
உத்தமனே நீ வாழி . . .
உன்னை நம்பிய இந்திரனுக்காக,
உன் மரியாதையையும் விட்டு,
அஹம்பாவியான மஹாபலி ராஜனிடமும்,
3 அடி நிலம் பிச்சைக் கேட்ட,
உத்தமனே நீ வாழி . . .
யாரையும் அழிக்காமல்,
நம்பின இந்திரனுக்கும்,
பரிஹஸித்த மஹாபலிக்கும்,
பொதுவான நன்மை செய்த,
உத்தமனே நீ வாழி . . .
ப்ரஹ்லாதனின் பேரன் மஹாபலி,
உனக்கு 3 அடி நிலம் தர சம்மதிக்க,
அதில் குஷியாகி ஆகாசத்தை
அடைத்துக்கொண்டு நின்ற,
உத்தமனே நீ வாழி . . .
இன்றும் மஹாபலிக்கு
காவல்காரனாக நின்று கொண்டிருக்கும்,
திரிவிக்ரமனே,உலகளந்த பெருமாளே,
உத்தமனே நீ வாழி . . .
வா . . .
எங்களையும் அள . . .
எங்கள் உள்ளங்களை அள . . .
எங்கள் கூட்டங்களை அள . . .
எங்கள் தலையும் வீணாய் போகிறது . . .
வா . . . மீண்டும் வா . . .
மீண்டும் ஒரு முறை,
இந்தக் குழந்தைகளின்,
அஹம்பாவத் தலைகளின் மேல்,
உன் பொன்னடியைச் சாற்றி,
உருப்பட வைப்பாயாக . . .
இன்று நீ பிறந்த திருவோணம் . . .
அதனால் எங்களுக்கு எல்லாம் பரிசு தா . . .
உன் திருவடியைப் பரிசாகத் தா . . .
நாங்களும் தருவோம் . . .
எதைத் தருவோம் . . .
எங்களையே தருவோம் . . .
இனி குள்ளர்களைப் பார்த்தால்,
உன்னை மட்டுமே நினைப்போம் . . .
இனி குள்ளர்களைப் பார்த்தால்,
உன்னை மட்டுமே நினைப்போம் . . .
வா . . .
திருவோணம் முடியும் முன் வா. . .
உத்தமனே வா . . .
உலகளந்தவனே வா . . .
வாமனனே வா . . .
திரிவிக்ரமனே வா . . .
துயரறு சுடரடியை
எங்கள் தலையில் இட்டு,
எம்மைக் காப்பாற்றும் . . .
வா . . . வா . . . வா. . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக