கிள்ளுக்கீரையல்ல !
ராதேக்ருஷ்ணா
நாம ஜபம் செய்யாமல்
ஒரு நாளும் இருக்கவேண்டாம் !
சத்குருவை வாழ்வில்
என்றும் மறக்கவேண்டாம் !
க்ருஷ்ணனை நினையாமல்
பொழுது போகவேண்டாம் !
சத்சங்கத்தை ஒரு நாளும்
தவிர்க்கவேண்டாம் !
யாரையும் தவறாக
ஒரு போதும் பேசவேண்டாம் !
இந்து மதத்தை இழிவாய்
சொல்வரோடு இணங்க வேண்டாம் !
நம் தெய்வங்களை பழிப்பவரோடு
என்றும் பழக வேண்டாம் !
பாகவத அபசாரம் செய்பவரை
மனதாலும் நினைக்க வேண்டாம் !
உடல் ஆரோக்கியத்தை
ஒரு நிமிஷம் கூட இழக்க வேண்டாம் !
அதர்மம் செய்பவரைக் கண்டு
மறந்தும் அஞ்ச வேண்டாம் !
சத்தியத்தைப் பேசுவதற்கு
எங்கும் தயங்க வேண்டாம் !
பக்தியை எப்பொழுதும்
எதற்காகவும் விடவேண்டாம் !
யாருக்காகவும் சுயமரியாதையை
விட்டுக்கொடுக்கவேண்டாம் !
மனதிலே பலவீனத்தை
ஒரு சமயத்திலும் வளர்க்கவேண்டாம் !
இல்லாதவரை ஒரு நாளும்
ஏளனம் செய்யவேண்டாம் !
அக்கிரமம் செய்பவர்களுக்கு
ஒரு நாளும் அடங்கவேண்டாம் !
இப்படியும் உன்னால் வாழமுடியும் !
நீ ஒன்றும் கிள்ளுக்கீரையல்ல !
உன்னால் வாழ முடியும் !
உன் இயல்பை சரி செய் !
உன் மதிப்பை உயர்த்து !
உன் க்ருஷ்ணனை அனுபவி !
உன் உலகில் நீ சுகமாய் இரு !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக