ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 4 ஆகஸ்ட், 2012

உயிர் தரியேன் . . .

ராதேக்ருஷ்ணா


நினைத்தேன் . . .
அழைத்தான் . . .
எங்கள் பார்த்தசாரதி ! ! !


அழைத்தான் . . .
சென்றேன் . . .
பார்த்தசாரதியின் கோவிலுக்கு !


சென்றேன் . . .
கண்டேன் . . .
காம்பீர்யமான கீதாசார்யனை !


கண்டேன் . . .
பொழிந்தான் . . .
அளவில்லாத கருணையை !


பொழிந்தான் . . .
பெற்றேன் . . .
பார்த்தசாரதியின் ஆசியை !


பெற்றேன் . . .
அடைந்தேன் . . .
இந்தப் பிறவியின் பயனை !


அடைந்தேன் . . .
கேட்டேன் . . .
என்றும் அவன் காதலை !


கேட்டேன் . . .
தந்தான் . . .
அவனது மனதில் ஓரிடத்தை !


தந்தான் . . .
கேட்டான் . . .
என் மனதில் ஓரிடம் !


கேட்டான்  . . .
கொடுத்தேன் . . .
என்னை பூரணமாக !


கொடுத்தேன் . . .
எடுத்தேன் . . .
சாரதியின் காதலை !


எடுத்தேன் . . .
திளைத்தேன் . . .
வேங்கட க்ருஷ்ணனின் திருவடியை !


திளைத்தேன் . . .
மறந்தேன் . . .
நான் என்னும் அகந்தையை !


மறந்தேன் . . .
பிறந்தேன் . . .
புதியதோர் கோபாலவல்லியாய்!


பிறந்தேன் . . .
மறவேன் . . .
ஒரு பொழுதும் சாரதியை !


மறவேன் . . .
உயிர் தரியேன் . . .
சாரதியை மறந்தால் !


உயிர் தரியேன் . . .
அடியேன் சிறியேன் . . .
வேங்கடநாதனின் தாசர்களுக்கு !

அடியேன் சிறியேன்
 என்றும் ராமானுஜ தாசன் !


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP