பார்த்துவிட்டேன் ! ! !
ராதேக்ருஷ்ணா
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
தன்னைத் தொடச்சொல்லி
ஆனந்தம் தரும்
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
தன்னடக்கம் உள்ளவருக்கே
எளியவனான
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
தரணியெல்லாம் புகழும்
சந்திரபாகா நதிக்கரையில்
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
புண்டலீகனுக்காக நிற்கும்
த்வாரகாநாதனான
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
இடுப்பில் கையை வைத்திருக்கும்
சாக்ஷாத் மன்மத மன்மதனான
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
ருக்குமாயியின் ப்ரிய நாயகனான
செங்கல் மேல் நிற்கும் வரதனான
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
தன்னைத் தேடுபவரைத்
தான் தேடிச் செல்லும் சுலபனான
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
அவன் என்னை நினைத்தான் !
அவன் என்னை அழைத்தான் !
அவன் தன்னைத் தந்தான் !
அடியேனை அவனே பார்க்கவைத்தான் !
அடியேனை அவனே தொடவைத்தான் !
அடியேனை அவனே ஆட்கொண்டான் !
அடியேனை அவனே ரக்ஷிக்கின்றான் !
அடியேனை அவனே போஷிக்கின்றான் !
விட்டலனைப் பார்த்துவிட்டேன் . . .
விட்டலனைப் பார்த்துவிட்டேன் . . .
விட்டலனைப் பார்த்துவிட்டேன் . . .
ஆகாயமே . . . அடியேன்
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
காற்றே . . . அடியேன்
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
நெருப்பே . . . அடியேன்
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
ஜலமே . . . அடியேன்
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
பூமியே . . . அடியேன்
விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
ஹே பண்டரீபுரமே !
அடியேன் விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
ஹே சந்திரபாகா !
அடியேன் விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
ஹே பறவைகளே !
அடியேன் விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
ஹே விதியே !
அடியேன் விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
ஹே ஊழ்வினையே !
அடியேன் விட்டலனைப் பார்த்துவிட்டேன் !
உன்னால் இனி என்ன செய்யமுடியும் !
வா . . .நீயா , நானா என்று பார்க்கலாம் !
நீயும் எத்தனை நாள் தான் என்னை
ஆட்டுவிப்பாய் . . .
இனி என் முறை . . .
இனி நானே உன்னை ஆட்டுவிப்பேன் . . . .
ஹே ஊழ்வினையே . . .
இதோ என் விட்டலனைப் பார்த்த
அபரிமிதமான பலத்தோடு
உன்னை ஜயிக்க வந்திருக்கிறேன் !
என்னைக் கண்டு ஓடாதே . . .
என்னைக் கண்டு ஒளியாதே . . .
ஊழ்வினையே . . .
வா . . .
நீ அல்லது நான் . . .
இன்றே முடிவு செய்வோம் . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக