தாயின் மடியில் . . .
ராதேக்ருஷ்ணா
தாயான பூமி . . .
அண்டவெளியில் ஒரு
அழகான தாய் நம் பூமி !
எத்தனை அதிசயங்கள் . . .
எத்தனை அற்புதங்கள் இவளிடத்தில் !
ஒரு புறம் அழகான மலைகள் !
ஒரு புறம் அற்புதமான பள்ளத்தாக்குகள் !
ஒரு புறம் வறண்ட பாலைவனம் !
ஒரு புறம் அடர்ந்த காடுகள் !
ஒரு புறம் பயங்கர குளிர் !
ஒரு புறம் சுட்டெரிக்கும் வெயில் !
ஒரு புறம் பனிக்கட்டிகள் !
ஒரு புறம் எரிமலைகள் !
ஒரு புறம் நல்ல வெளிச்சம் !
ஒரு புறம் இருண்ட ப்ரதேசம் !
ஒரு புறம் நகரங்கள் !
ஒரு புறம் கிராமங்கள் !
பூமித்தாய்க்கு பலவித முகங்கள் !
இன்று வரை பலரும் அறிந்ததில்லை !
பூமி என்னும் தாயின் மடியில்
நான் கற்றது பக்தி என்னும் பாடம் !
பக்தி என்னும் பாடத்தில் நான்
புரிந்துகொண்டது அற்புதமான க்ருஷ்ணனை !
மலையில் நான் கண்டது
க்ருஷ்ணனின் தோள்களை . . .
மேகங்களில் நான் கண்டது
க்ருஷ்ணனின் திருக்கேசத்தை . . .
குளிரில் நான் அனுபவித்தது
க்ருஷ்ணனின் அன்பை . . .
சிவந்த மலர்களில் நான் கண்டது
க்ருஷ்ணனின் அழகான கண்களை . . .
தித்திப்பான பழங்களில் நான் ருசித்தது
க்ருஷ்ணனின் செங்கனிவாயை . . .
வெதுவெதுப்பான இளம் வெய்யிலில்
நான் சுகமாய் பெற்றது
க்ருஷ்ணனின் அன்பான அரவணைப்பை . . .
எல்லாவற்றையும் மறைக்கும்
திடீர் மேகங்களில் நான் கண்டது
க்ருஷ்ணனின் மாயா பலத்தை . . .
பறவைகளின் இனிமையான சப்தத்தில்
நான் கற்றுக்கொண்டது
க்ருஷ்ணனின் ஆசிர்வாதத்தை . . .
பச்சை வண்ண புல்வெளிகளில்
நான் கண்டுகொண்டது
க்ருஷ்ணனின் எல்லையில்லா அன்பை . . .
பூமித்தாயே . . .
உன்னை நான் என்றும் மறவாதிருக்க
நீயே எனக்கு க்ருஷ்ண பக்தி தருவாய் . . .
க்ருஷ்ணா . . .
நான் என்றும் பூமியில் உன் பெருமையைப்
பேசும் வாய்ப்பையே எனக்குத்
திரும்பத் திரும்பத் தருவாய் . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக