ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

குருவாயூரப்பா ! பத்மநாபா !

ராதேக்ருஷ்ணா
 
 
 
குருவாயூரப்பா . . .
நான் என்ன செய்துவிட்டேன் உனக்கு !
என் மேல் ஏனடா இத்தனை பரிவு உனக்கு ?
 
 
 
குருவாயூரப்பா . . .
நான் உன் நாமத்தை ஜபிப்பவனில்லை !
ஆயினும் ஏனடா இத்தனை பரிவு என் மேல் ?
 
 
 
குருவாயூரப்பா . . .
நான் உன்னை தியானிப்பவனில்லை !
ஆயினும் ஏனடா உனக்கு இத்தனை பரிவு ?
 
 
 
குருவாயூரப்பா . . .
நான் ஒன்றும் உன் பூந்தானமில்லை !
ஆயினும் என் மேல் ஏன் இத்தனை பரிவு ?
 
 
 
குருவாயூரப்பா . . .
நான் உன்னைப் பற்றிப் பாடும்
நாராயண பட்டத்திரி இல்லை !
ஆயினும் ஏனடா இத்தனை பரிவு உனக்கு ?
 
 
 
குருவாயூரப்பா . . .
நான் உனக்காக அழும் குரூரம்மை அல்ல !
ஆயினும் ஏன் என் மேல் இத்தனை பரிவு ?
 
 
 
குருவாயூரப்பா . . .
நான் உனது அடிமை மஞ்சுளா அல்லவே !
ஆயினும் ஏன் எனக்காக நீ ஏன் பரிகிறாய் ?
 
 
 
குருவாயூரப்பா . . .
நான் உன்னைத் தொழும் வசுதேவரில்லை !
ஆயினும் என்னிடம் இத்தனை பரிவா ?
 
 
 
குருவாயூரப்பா . . .
என்னைக் காக்கவைப்பதிலும் உனக்கு ஆசை !
என்னை சீக்கிரம் அழைப்பதிலும் உனக்கு ஆசை !
 
 
குருவாயூரப்பா . . .
நீ யாரப்பா ?
ஸ்வயம் ஸ்ரீமன் நாராயணனா ?
 
 
இல்லை . . .
ஸ்வயம் தீராத விளையாட்டு க்ருஷ்ணனா ?


நீ இருவரும் இல்லை . . .
என்னை வம்பிற்கு இழுக்கும்
திருட்டுப் பிள்ளை . . .


போடா . . .குருவாயூரப்பா . . .
என்னைப் படுத்துவதில் உனக்கு
என்ன இத்தனை ஆனந்தம் . . .


நீ யார் தெரியுமா ?
நின்றிருக்கும் என் பத்மநாபன் !



இன்னும் என்னைப் படுத்துவாய் !
எனக்கு உன்னை ரொம்ப பிடித்துவிட்டதே !
 
 
பத்மநாபா . . . குருவாயூரப்பா . . .
குருவாயூரப்பா . . . பத்மநாபா . . .
 
 
இவர் இருவரல்ல . . .
இருவரும் ஒருவரே . . .
ஒருவரே இருவரானார் . . .
 
 
 
பத்மநாபர் சிவபெருமானுக்குத்
தன் வலது கையடியில் இடம் தந்தார் !
 
சிவபெருமான் குருவாயூரப்பனுக்கு
தன் இடத்தையும் குளத்தையும் தந்தார் !
 
 
 
குருவாயூரப்பனுக்கு
பட்டத்திரி நாராயணீயம் தந்தார் . . .
 
பத்மநாபனுக்கு
ஸ்வாதித் திருநாள் சதகம் தந்தார் . . .
 
 
 
இதுபோல் ஆயிரம் ஒற்றுமை . . .
பத்மநாபனுக்கும், குருவாயூரப்பனுக்கும் !


அதனால் இருவரும் ஒருவரே . . .


என் பத்மநாபனை நான்
குருவாயூரில் அப்பனாகக் கண்டேன் !

குருவாயூரப்பனை நான்
பத்மநாபனாக அனந்தபுரியில் காண்கிறேன் !


குருவாயூரப்பா . . . பத்மநாபா . . .



 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP